சீமான் என் தங்கச்சியை கட்டிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டான்.. நடிகையின் அக்கா மரண படுக்கையில் கண்ணீர்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் மீது இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அவர் மீது இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து, குற்றம் சாட்டியுள்ள பிரபல நடிகை நாள் தோறும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியே சொல்லிக் கொண்டு உள்ளார். இந்நிலையில் சீமான் குறித்து நடிகையின் சகோதரி மரணப்படுக்கையில் கூறியுள்ள கருத்துகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது, பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடுத்த போது, நடிகையின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீமான் கூறினார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை, சீமானால் தான் 7 முறை கருக்கலைப்பு செய்து கொண்டேன் எனக் கூறி ஷாக் கொடுத்தார். மேலும் இருவரும் நெருங்கிப் பழகி காதலித்தோம். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டோம். சீமான் என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் எனக் கூறினார்.
சீமான் மீது இப்படி பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகையே, வழக்கை திரும்பவும் பெற்றுக் கொண்டார். இது மட்டும் இல்லாமல், அவ்வப்போது வழக்கு தொடுப்பது, அதன் பின்னர் வழக்கை வாபஸ் பெறுவதுமாக இருந்தார். எனவே, இந்த வழக்கை விரைந்து முடித்து வைக்க வேண்டும் என சீமான் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சீமான் தரப்பில் இருந்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. காவல்துறை சார்பில் சீமானுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக சொல்லியும் விசாரணை நாளுக்கு நாள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
சம்மன்: சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை தரப்பில் சம்மன் பிறப்பிக்கப்பட்டது. சமனை சீமானிடம் ஒப்படைக்க காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால், அவரது வீட்டு சுவரில் சம்மனை ஒட்டி விட்டு சென்றனர். காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்ட பின்னர் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் காவல்துறையினர் ஒட்டிய சம்மனைக் கிழித்தனர் இது தொடர்பாக விசாரிக்க காவல்துறையினர் சீமான் வீட்டிற்கு சென்றனர். அப்போது சீமான் வீட்டு பாதுகாவலர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளுவாக மாறியதால், சீமான் வீட்டு பாதுகாவலரை காவல்துறையினர் குண்டுகட்டாக தங்களது வாகனத்தில் ஏற்றினர். இது தொடர்பாக தெரிந்து கொண்ட சீமான் காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்மனுக்கு ஆஜராக முடியாது எனவும் கூறினார். இது தொடர்பாக அவரே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார், அப்போது ஆஜராகவில்லை என்றால் என்னை என்ன செய்வாய்? ஆஜராக முடியாது என்றெல்லாம் கூறினார். ஆனால் சம்மனில் குறிப்பிட்ட தேதியில் அதாவது மறுநாளே சீமான் காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

கொச்சை: கடைசியாக அளித்த சம்மனுக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி வந்த பின்னர் சீமான் பேசியது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. இன்னும், சொல்லப்போனால், சீமான் கொச்சையாக பேசினார். சம்மனுக்கு ஆஜராவதற்கு முன்னரும் கொச்சையாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதாவது, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவரைப் போல் பேசாமல், பேசினார். குறிப்பாக நடிகையை தரக்குறைவாக பேசினார். மேலும், தனக்கும் நடிகைக்கும் தொடர்பு இருந்தது உண்மை என்றும் கூறினார். நடிகை முதலில் குற்றச்சாட்டு கூறியபோது மறுத்த சீமான், இப்போது ஒத்துக் கொண்டுள்ளார். இது நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்தது.
கருக்கலைப்பு: நடிகை, சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்து கொண்டதால், தற்போது அவரது கர்ப்பப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள் என சமீபத்தில் அவர் வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தார். இது மேலும் அதிர்ச்சி அளித்தது. அந்த ஆடியோவில் நடிகை தனது அக்கா குறித்தும் தெரிவித்திருந்தார். அதாவது, சீமானால் கண்ணீர் சிந்தி சிந்தி எனது அம்மா உயிரை இழந்து விட்டார். இப்போது எனது அக்கா படுத்த படுக்கையாக மாற்றிவிட்டார். எனது அக்காவை ஒரு தாய் குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்கிறேன் என அழுது கொண்டே கூறினார்.

சமரசம்: இன்றைக்கு சீமானுக்கு ஆதரவாக இருப்பவர்கள், நானும் சீமானும் குடும்பம் நடத்தும் போது எங்கே சென்றார்கள்? பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், என அனைவரும் நினைக்க வேண்டும். இனி சீமானை காப்பாற்ற யார் வந்து நின்றாலும் அவர்களை நான் கடுமையாக விமர்சிப்பேன். நான் நினைத்தால் சீமானுடன் சமரசமாக போய்விட முடியும், ஆனாலும் நான் போராடுவது தமிழ்நாடு மக்களுக்கு சீமான் எப்படிப்பட்டவர் என தெளிவாக தெரிய வேண்டும். சீமான் போன்றவர்கள் தலைவர்களாக ஆகக் கூடாது என்பதற்காக போராடிக்கொண்டு உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

விமர்சனம்: இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், திமுகவினர், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் சீமான் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இணைய வாசி ஒருவர், பெண் நல்லவரா கெட்டவரா நாம் தீர்மானிக்க கூடாது கடவுள் பார்த்துக் கொள்வார் ஆனால் பெண் பாவம் பொல்லாதது நிச்சயம் தண்டனை உள்ளது என பதிவிட்டுள்ளார். சீமான் வழக்கு நீதிமன்றத்தில் பல திருப்பங்களை சந்தித்து வந்தாலும் ஊடகங்களில் சமூக ஊடகங்களிலும் நடிகைக்கு ஆதரவாக கருத்துகள் அதிகரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications











