இளம்பெண்ணை நிர்வாணமாக நடிக்க வற்புறுத்திய நடிப்பு பயிற்சியாளர்
ஹைதராபாத்: நடிப்பு கற்க வந்த பெண்ணை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நிற்குமாறு கூறியுள்ளார் பிரபல நடிப்பு பயிற்சியாளர் வினய் வர்மா.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சூத்ரதார் நடிப்பு பயிற்சி மையத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் வினய் வர்மா. அவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்களுக்கு கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் வினய் வர்மா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உடை
கடந்த 15ம் தேதி நான் வினய் வர்மாவின் நடிப்பு வகுப்புகளில் சேர்ந்தேன். 7 ஆண்கள், 2 பெண்கள் வகுப்பில் சேர்ந்தோம். வகுப்பின் கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு வினய் வர்மா எங்களை ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நிற்குமாறு கூறினார் என்கிறார் அந்த மாணவி.

வினய்
வினய் வர்மா கூறியதை அடுத்து 7 மாணவர்கள் ஆடையை அவிழ்த்தனர். அதை பார்த்த வினய் உள்ளாடையையும் கழற்றுமாறு கூறினார். ஆடையை அவிழ்க்காவிட்டால் வகுப்பில் இருந்து வெளியேறுமாறு வினய் தெரிவித்தார் என்று அந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருப்பம்
நிர்வாணமாக நடிப்பது நடிப்பு பயிற்சியில் ஒரு பகுதி. மாணவ, மாணவிகளால் அப்படி நடிக்க முடியுமா என்பதை கண்டறியவே இப்படி ஒரு பயிற்சி. நிர்வாணமாக நடிக்க முடியாதவர்களை வெளியே நிற்க வைப்போம். வகுப்புகளில் சேரும்போதே அவர்களிடம் இப்படி ஒரு விஷயம் இருப்பதை கூறவில்லை என்கிறார் வினய் வர்மா.

கைது
வினய் வர்மாவுக்கு எதிராக அந்த 21 வயது பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து வினய் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











