For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முதலில் நடிப்பு அடுத்தது தான் மற்றவை எல்லாம்- மாயநதி நடிகையின் பாலிசி

  |
  Maayanadhi Audience reaction | Abi Saravanan | Venba | Adukalam Naren

  மாயநதி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆப்படத்தில் நடித்த ஒருவருடைய கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

  கடந்த 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாயநதி அப்பா மற்றும் மகள் பாசத்தை பற்றி பேசியது இப்படம். மற்றும் இதில் சிறு வயது படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற படமாக இது இருக்கிறது என்று பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வருகின்றனர்.

  Acting is my life and acting is my breath says Mayanadhi actress

  இப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தி அனைவரது கவனத்தையும் அதிகம் கவர்ந்தவர் விஜயா ஸ்ரீ. இவரை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

  இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்டாக தான் முதலில் பயனத்தை தொடங்கி உள்ளார். இவர் நடிப்பதை பார்த்த பலர் நீங்கள் பல வருடங்களாக நடித்து வருகிறீர்களா என்று கேட்டனர். இவரது முதல் நடிப்பை அரங்கேற்றம் செய்ததும் அவருக்குள் ஒரு மன நிம்மதி மற்றும் அளவு கடந்த சந்தோஷம் ஏற்பட்டதாகவும் எதோ ஒன்றை சாதித்து விட்டேன் என்று கருதியதாகவும் நினைத்துள்ளார்.

  Acting is my life and acting is my breath says Mayanadhi actress

  அதன் பின் பலர் அவரிடம் சென்று ஏன் நீங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள் அவருக்கு சினிமாவில் நடிக்க சற்று தயக்கமாக இருந்ததாக அவர்களிடம் கூறியுள்ளார். இவர் மேடை நாடகங்களில் நடிப்பதற்காக ஞானி என்பவரிடம் சேர்த்ததாகவும் . அவர் வாய்ப்பு கொடுத்தார் என்றும் அதனை எப்பொழுதும் மறக்க முடியாது என்றும் தமிழ் அவருக்கு சுமாராக தான் வரும் அதனால் மிகவும் உதவினார் என்றும் சொன்னார் . அது தான் இவருக்கு முதல் அனுபவம் வெறும் ஜந்து நாட்களில் இவர் தயாராகினார்
  அந்த மேடை நாடகத்தில் நடித்த போது அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.

  Acting is my life and acting is my breath says Mayanadhi actress

  அதன் பின் பல குழுக்களுடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். நாடகத்தில் மட்டுமே நடித்து கொன்டு இருந்த காலத்தில் இவருக்கு வெப் சீரிஸ் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது அதனால் அதில் நடித்துள்ளார். இதன் பின் குறும் படங்களில் நடிக்க பல வாய்ப்பு வந்ததாகவும் அதில் நடித்ததாகவும் மற்றும் நடிப்பு இவருக்கு மிகவும் பிடிக்கும் அதற்காக உயிரையும் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

  Acting is my life and acting is my breath says Mayanadhi actress

  மாயநதி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். என்னை படத்தின் இயக்குனர் அசோக் தியாகராஜன் கேட்டார் என்ன கதாபாத்திரம் வேண்டும் எதில் நடிக்கிறீர்கள் என்றார் நான் எதுவாக இருந்தாலும் ஒகே என்று கூறினேன் , நெகட்டிவ் கதாபாத்திரம் நான் நன்றாக செய்வேன் என்றேன். இரண்டு மாதங்கள் கழித்து என்னை அழைத்து இதில் மூன்று கதாபாத்திரம் இருக்கிறது நீங்கள் எதனை நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார் ஒன்று தலைமையாசிரியர் மற்றும் போலீஸ் அதிகாரி மற்றும் அந்த ஆசிரியர் கதாபாத்திரம் என்று கூறினார்.

  ரத்னசிவா எந்த ஹீரோக்கும் கதை சொல்லி ஓகே பன்னுவார் என்றார் ஜீவா

  பின் ஆசிரியர் கதாபாத்திரம் எனக்கு கொடுத்தார். என் போக்கில் அவர் விட்டதால் என்னால் இது போன்று கதாபாத்திரம் செய்ய முடிந்தது அவருக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்தார். இது போன்ற பதிலை சமீபத்தில் நமக்கு ப்ரீத்யேகமாக கொடுத்த பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார்.

  படத்தில் இவரது கதாபாத்திரம் பார்க்கும் பொழுது அனைவருக்கும் புரியும் எப்படி இவர் நடித்துள்ளார் மற்றும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மற்றும் படத்தை பார்த்த அனைவரும் இவரது கதாபாத்திரத்தை பாராட்டியுள்ளனர். இப்படத்தில் இவர் மாலினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திங்கள் குறைவு இது போன்ற ஒரு நடிகை அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்பது நிதர்சனமான உண்மை.விஜயா ஸ்ரீக்கு மேலும் பல பாராட்டுக்கள் வந்து குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Read more about: abi saravanan mayanadhi actress
  English summary
  A famous theater artist Vijaya sri acted in the movie called Mayanadhi . this movie released few days back and after the release she was recognized by the tamil cinema fans and she was happy on the role which she acted. she is very much dedicated and passionate towards the art of acting.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X