என்னுடைய தொழில் நடிப்பு மட்டுமே நான் மாற்ற விரும்பவில்லை - மகேஷ் பாபு
சென்னை: எனக்கு தெரிந்த ஒரே வேலை நடிப்பது மட்டும் தான். அதையே நான் முழுமையாக செய்ய விரும்புகிறேன். அதை மாற்ற நான் விரும்பவில்லை என்று நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்ற வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென்று அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள, அதுவும் அதிக பெண் ரசிகைகளை கொண்டுள்ள ஒரே நடிகர் மகேஷ்பாபு மட்டுமே. தென்னிந்தியா தாண்டி இந்திய அளவில் அதிகம் ரீச் ஆன நடிகர் இவர்தான். தமிழ்நாட்டிலும் இவருடைய டப்பிங் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

மகேஷ் பாபு சிறு வயதிலிருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார். இன்று அவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் டோலிவுட்டில் மிக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த பாரத் எனே நேனு (பரத் என்னும் நான்) மற்றும் மஹரிஷி என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இப்போது அவர் இயக்குநர் அணில் ரவிப்புடி இயக்கும் சரிலேறு நீகேவ்வாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்மி மேஜராக நடிக்கிறார். மேலும் அவருடன் ஜோடியா ராஷ்மிகா நடிக்கிறார்.

அவர் சினிமா மற்றும் வாழ்க்கையில் பிஸியாக இருக்கும்போது, மகேஷின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வதந்திகள் எழுந்துள்ளன. நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்ற வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
ஆனால், நடிகர் மகேஷ் பாபுவோ, நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நான் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், அப்போது நான் செய்ததை, செய்வதை நான் மிகவும் விரும்பினேன்.
நிச்சயமாக, அந்த நாட்களில் என்னுடைய நோக்கங்கள் வேறுபட்டன. பள்ளிக்கு செல்வதை நான் ஒரு வருடம் தவறவிட்டபோது, என்னுடைய அப்பா படிக்கச் சொன்னார். பின்னர் திரும்பி வந்து திரைப்படங்களில் நடிக்க சொன்னார். அதாவது, எனக்குத் தெரிந்த ஒரே விஷயம், நடிப்பு மட்டும் தான். நான் அதை மாற்ற விரும்பவில்லை, என்று அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணம் தான் அனால் வெற்றி என்பது சிலருக்கு மட்டும் தான் முழுமையாக கிடைக்கும். இதை நன்கு புரிந்தவர் மகேஷ் பாபு.


Click it and Unblock the Notifications