“அதெல்லாம் ரொம்ப ஈஸி. அடுத்த மூவில அதையும் பார்க்கலாம்: லெஜெண்ட் அண்ணாச்சியின் அசால்ட் சம்பவங்கள்!
சென்னை: வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன், தற்போது ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்துவிட்டார்.
'தி லெஜெண்ட்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு செம்மையான ட்ரீட் கொடுத்துள்ள அண்ணாச்சி, அடுத்தடுத்து இன்னும் பல சூப்பர் ஹிட்கள் கொடுக்க ரெடியாகி வருகிறார்.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், எதிர்பார்க்காத சில ட்வீஸ்ட்களை விரைவில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

தியாகராயநகரின் அடையாளம்
சென்னை தியாகராயநகரின் அடையாளமாக அனைவராலும் பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது சரவணா ஸ்டோர்ஸ். அதன் உரிமையாளர்களில் ஒருவரான அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன், ஆல்ரெடி அவரது கடையின் விளம்பரங்களில், தமன்னா, ஹன்சிகா உள்ளிட்டோருடன் ஆட்டம் போட்டு, அதிரடி காட்டியிருந்தார்.

தி லெஜெண்ட்
அப்படியே சினிமாவிலும் ஹீரோவாகிவிட வேண்டும் என முடிவெடுத்த அண்ணாச்சி, அதனை தற்போது சாத்தியப்படுத்தியும் உள்ளார். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 'தி ஜெண்ட்' நேற்று திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சயின்டிஸ்ட் பாத்திரத்தில் நடித்துள்ள அண்ணாச்சி, ஆகச்ன், செண்டிமெண்ட் என நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார்.

மக்கள் கொண்டாட்டம்
'தி லெஜெண்ட்' படத்தை பார்த்த ரசிகர்கள், அண்ணாச்சியின் நடிப்பை கண்டு மிரண்டுபோய் உள்ளனர். சினிமா ரசிகர்களையும் கடந்து மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இத்திரைப்படம். ரசிகர்களைப் போல மக்களும் அண்ணாச்சியின் நடிப்பையும் அவரது தன்னம்பிக்கையையும் பாராட்டி 'தி லெஜெண்ட்' படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நடிப்பது ஈஸி
இதனிடையே, 'தி லெஜெண்ட்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அண்ணாச்சி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அசத்தலாக பதிலளித்துள்ளார். அதில், நடிப்பை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கார் ஓட்டுவதைப் போல தான் நடிப்பும், பழக பழக ஈஸியாகிவிடும். இப்போது எனக்கும் நடிப்பது ரெம்பவே ஈஸியாகிவிட்டதாகக்" கூறியுள்ளார். அதேபோல், "ஆர்வம் இருந்தா டான்ஸ், ஃபைட் எல்லாத்தையுமே அசால்ட் செய்துவிடலாம்" என கெத்தாகத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஹீரோ
தொடர்ந்து பேசியுள்ள அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன், "அடுத்த படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அது இன்னும் தாறுமாறாக இருக்கும்" எனவும் மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாம, "அந்தப் படம் சும்மா இண்டர்நேஷனல் லெவலில் இருக்கும் என்றும், நான் நடிக்கும் எல்லா படங்களும் எனது தயாரிப்பிலேயே உருவாகும்" எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் 'தி லெஜெண்ட்' படத்தை சின்ன பட்ஜெட்டில் தான் ஸ்டார்ட் செய்ததாகவும், அதன்பிறகு இப்படி பிரமாண்டமாக எடுத்தோம்" எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











