சுந்தர்.சி மிரட்டும் ஆக்ஷன் தீபாவளியன்று ட்ரெய்லர் வெளியீடு

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் மற்றும் தமன்னா இணைந்து நடிக்கும் ஆக்ஷன் திரைப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதைக்கரு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கூடங்களில் நடக்கும் சம்பவத்தை வைத்து திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தில் விஷாலும், தமன்னாவும் கமாண்டோ வீரர்களாக நடித்துள்ளனர்.

Action Film Trailer will be released on Diwali

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம்தான் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா, ஜஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் ட்ரைலர் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு, பிக்பாஸ் சீசன் 3யில் இடம்பெற்ற சாக்ஷி அகர்வால் டப்பிங் செய்து வருகிறார். அந்த புகைப்படம் சமீபத்தில் டிரெண்ட் ஆகியது. சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டப்பிங் செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பெண் போலீஸ் அதிகாரிக்கு டப் செய்வது போல் தெரிகிறது.

Action Film Trailer will be released on Diwali

படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. மேலும் சுந்தர்.சி கூட்டணியில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் படமும் ஒரு பக்கம் தயாரிப்பு வேலைகளை துவங்கி உள்ளன. அந்த படத்திற்கு நான் சிரித்தால் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதும் நமக்கு முன்பே வந்த தகவல். நான் சிரித்தால் படத்திற்காக மூன்றாம் முறையாக இணையும் கூட்டணி இது.

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஏற்கனவே இரு படங்களில் நடித்துள்ளார். மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகியவை. இதில், மீசைய முறுக்கு படத்தை தானே இசையமைத்து இயக்கி நடித்திருந்தார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அந்த படம் அவரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

கமர்சியலாக அந்த படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின்பு, பார்த்திபன் தேசிங்கு என்ற அறிமுக இயக்குநர் மூலம் நட்பே துணை படம் இயக்கப்பட்டது. அந்த படத்திற்கும் இயக்க மேற்பார்வை ஹிப்ஹாப் தமிழா ஆதியே செய்திருந்தார். இந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என ஆதி தெரிவித்திருக்கிறார்.

சுந்தர்.சியின் சங்கமித்ரா படம் எடுக்கப்படாமல் கிடப்பில் இருப்பது வருத்தம் தான். சுந்தர்.சி மிக பிரம்மாண்டமாக இயக்க இருந்த படம் தான் சங்கமித்ரா. இதில் ஆர்யா ,ஜெயம் ரவி ஆகியோர் ஒப்பந்தம் ஆகி இருந்தனர். இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் எடுக்கப்படுவது தாமதமாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X