விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 22ம் தேதி வெளியாகிறது.
சென்னை: ஆம்பள படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்ஷன். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காமெடி டு ஆக்ஷன்
சுந்தர்.சியின் காமெடி என்றே தனி அடையாளம் படுத்தும் அளவுக்கு எண்ணற்ற காமெடி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால், விஷாலின் இந்த ஆக்ஷன் படத்தில், காமெடிக்கு பதிலாக ஆக்ஷன் காட்சிகளே அதிகம் நிறைந்திருக்கிறது என்பதை டிரைலரை பார்த்தாலே தெரிந்துவிடும்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை
சுந்தர்.சி படங்களில் எந்த அளவுக்கு காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காதோ அதை போலவே கவர்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. ஆக்ஷன் பட டிரைலரில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், ஆக்ஷன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை தமன்னா பச்சை நிற பிகினி உடையில் தொடை தெரியும் அளவிற்கு தோன்றி ரசிகர்களை குஷி படுத்தினார்.
இந்தி பட சாயல்
ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ள பாலிவுட் படமான வார் படத்தின் சாயலில் ஆக்ஷன் படம் இருப்பதாகும், டிரைலரில் வந்த பல காட்சிகள் பாலிவுட் ஆக்ஷன் படம் போலவே இருப்பதகாவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் சிங்கி எப்போது?
ஆக்ஷன் படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாடலான "நீ சிரிச்சாலும்" பாடல் வரும் செவ்வாயன்று அக்டோபர் 22ம் தேதி வெளியாகிறது. இந்த பாடல் வரிகள் விஷாலை துரத்தி துரத்தி தமன்னா காதல் செய்வது போல எழுதப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











