ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு இன்று 56வது பிறந்தநாள்... பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : அனைத்து மொழி ரசிகர்களாலும் எந்த வித பாகுபாடுமின்றி ரசிக்கப்படும் வெகு சில நடிகர்களில் நடிகர் அர்ஜுன் முதன்மையானவர்.

பயங்கரமான சண்டை காட்சிகளை கொண்ட ஆக்சன் திரைப்படங்களிலும், நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருக்கும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுனுக்கு இன்றும் ரசிகர்கள் ஏராளம்.

அதிரடி சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக்கொண்டு இன்றுவரை ரசிகர்களை ரசிக்க வைத்த வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

தீவிர ரசிகரான

தீவிர ரசிகரான

சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தனக்கான ஸ்டைலுடன் சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் என ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில், நடிகர் புரூஸ் லீயின் தீவிர ரசிகரான அர்ஜுன் அவரது பாணியிலேயே கராத்தேவை முறையாக கற்றுக்கொண்டு அதை திரைப்படங்களில் தனது சண்டைக்காட்சிகளில் புகுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

சிம்ஹா மரி சய்ன்ய

சிம்ஹா மரி சய்ன்ய

இயல்பிலேயே இந்திய தேசத்தின் மீது மிகப்பெரிய பற்று கொண்ட அர்ஜுன், தேசப்பற்று மிகுந்த பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். பிரபல கன்னட நடிகரின் மகனான இவர் "சிம்ஹா மரி சய்ன்ய" இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவ்வாறு அறிமுகமானதை தொடர்ந்து கன்னடா, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஜெய்ஹிந்த், காக்கிச் சட்டை போட்ட மச்சான், குருதிப்புனல் உள்ளிட்ட தேசப்பற்றை ஊற்றும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பல ரசிகர்களை கவர்ந்ததோடு அனைவருக்கும் பரிச்சயம் ஆனார்.

ஆக்சன் கிங் அர்ஜுன்

ஆக்சன் கிங் அர்ஜுன்

தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த ஆக்சன் நாயகனாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைல் பாணியை வைத்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்ததால் இவரை அனைவரும் ஆக்சன் கிங் என அழைத்து வந்தனர்.

சுதந்திர தின நாளும்

சுதந்திர தின நாளும்

இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்டுள்ள அர்ஜுன் 1994 ஆம் ஆண்டு இயக்கி நடித்திருந்த ஜெய்ஹிந்த் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து அவரை புகழின் உச்சியில் நிறுத்தியது. மேலும் இன்றளவும் இந்திய அளவில் தேசப்பற்றை போற்றும் வகையில் வெளியான மிகச்சிறந்த திரை படங்களில் ஜெய்ஹிந்த் மிக முக்கியமான திரைப்படமாக போற்றப்பட்டு வருகிறது. இவரது பிறந்த நாளும் இந்தியாவின் சுதந்திர தின நாளும் ஒரே தேதியில் வருவதாலோ என்னவோ இவரின் படங்களில் தேசப்பற்று எப்போதுமே சற்று அதிகமாகவே இருக்கும்.

தனித்துவமான நடிகராக

தனித்துவமான நடிகராக

இவ்வாறு இவர் நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்த நிலையில் அதைத்தொடர்ந்து குருதிப்புனல், ஜென்டில்மேன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கும் ஒரு தனித்துவமான நடிகராக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்படும் மிகச் சிறந்த நடிகராக இன்றுவரை வலம் வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X