மகளை பெரிய நடிகையாக்க வேண்டும்... தானே களத்தில் குதிக்கும் பிரபல நடிகர்!
ஐதராபாத் :கோலிவுட்டில் ஆக்ஷன் கிங் என்று பெயர் எடுத்தவர் நடிகர் அர்ஜூன். இவரது படங்களில் இவர் மேற்கொள்ளும் ஆக்ஷன் காட்சிகள் இவருக்கு இந்தப் பெயரை பெற்றுத் தந்துள்ளது.
ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் அதிரடி நாயகனாக நடித்த அர்ஜூன் தற்போது கேரக்டர் மற்றும் வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியையும் இவர் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன்
கோலிவுட்டில் ஆக்ஷன் கிங் என்று பெயரெடுத்த அர்ஜூன் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து செயல்பட்டவர். இவரது முதல்வன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் அர்ஜூன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் இவர் சிறந்த நடிகராக பெயரெடுத்தவர்.

கேரக்டர் ரோல்களில் அர்ஜூன்
ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு கேரக்டர் ரோல்களில் நடிக்க துவங்கினார். வில்லன் கதாபாத்திரங்களிலும் இவரை பார்க்க முடிந்தது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து புதிய ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சர்வைவர் தொகுப்பாளர்
இதனிடையே சர்வைவர் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். கமல்ஹாசனின் தொகுப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த சர்வைவர் நிகழ்ச்சி மிகப்பெரிய போட்டியாக அமைந்தது. பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட இந்த ஷோ, வாரந்தோறும் பல டாஸ்க்குகளை அவர்களுக்கு கொடுத்து சிறப்பாக நடந்தது.

தெலுங்கில் படமியக்கும் அர்ஜூன்
தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கமிட்டாகி நடித்துவரும் அர்ஜூன் தற்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் ஹீரோவாக நடிக்கவுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கிய அர்ஜூன் தற்போது தெலுங்கிற்கு தாவியுள்ளார்.

மகளை நாயகியாக்கிய அர்ஜூன்
இந்தப் படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவையே ஹீரோயினாக களமிறக்கவுள்ளார் அர்ஜூன். கடந்த 2013ல் விஷாலுடன் ஜோடி சேர்ந்து பட்டத்து யானை என்ற படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இந்தப் படம் சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றிப் பெறவில்லை. ஐஸ்வர்யாவிற்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நாயகியாக அறிமுகம்
இந்நிலையில் தன்னுடைய மகளை தெலுங்கில் நாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளார் அர்ஜூன். இதன்மூலம் ஐஸ்வர்யாவை தெலுங்கில் சிறப்பான நாயகியாக மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் கிங் இயக்கத்தில் ஆக்ஷன் படம் வெளியாகுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











