லியோவில் வெறும் ஆக்‌ஷன் கிங் இல்லை... அதுக்கும் மேல... அர்ஜுன் கொடுத்த சீக்ரெட் கோர்ட்வேர்ட்

சென்னை: வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது லியோ ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

முதலில் தளபதி 67 என தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் லியோ என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் அர்ஜுனும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், லியோ படத்தில் விஜய்யுடன் நடிப்பது பற்றியும், தனது கேரக்டர் குறித்தும் மனம் திறந்துள்ளார் அர்ஜுன்.

 விஜய்யுடன் முதன்முறையாக அர்ஜுன்

விஜய்யுடன் முதன்முறையாக அர்ஜுன்

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 டைட்டில் லியோ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியானது. அதன்படி இந்தப் படத்தில் விஜய் தவிர்த்து த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன், டான்ஸர் வசந்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. த்ரிஷா தவிர மற்றவர்கள் அனைவருமே முதன்முறையாக விஜய்யுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 அர்ஜுன் கேரக்டருக்கு ஆசைப்பட்ட விஜய்

அர்ஜுன் கேரக்டருக்கு ஆசைப்பட்ட விஜய்

லியோ டைட்டில் வெளியாகும் முன்னரே மொத்த படக்குழுவினரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்தனர். இந்தப் படத்தில் அர்ஜுன் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களின் ஹீரோவான அர்ஜுன் தனது படங்களில் ஆக்‌ஷனில் பயங்கரமாக மிரட்டுவார். அதனாலேயே அவருக்கு ஆக்‌ஷன் கிங் என்ற பெயரும் உண்டு. முதன்முதலாக மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் அர்ஜுன். இறுதிவரை நேர்மையான போலீஸ் ஆபிஸராகவே வரும் அர்ஜுன், க்ளைமேக்ஸில் தான் ரியல் வில்லன் முகத்தை காட்டுவார். குறிப்பாக அர்ஜுனின் இந்த கேரக்டர் பற்றி வெங்கட் பிரபு சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேன் என விஜய் அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 மனம் திறந்த அர்ஜுன்

மனம் திறந்த அர்ஜுன்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் லியோ படத்தில் நடிக்கும் அர்ஜுனின் லுக் வெளியாகி வைரலானது. வித்தியாசமான ஹேர்ஸ்டைல், மீசை என செம்ம மாஸ்ஸாக இருந்தார். அதேபோல், சென்னையில் நடந்த தளபதி 67 படத்தின் பூஜையிலும் அவர் கலந்துகொண்டார். இதனையடுத்து தற்போது லியோ படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார் அர்ஜுன். அதில் "விஜய் மிகப்பெரிய நடிகர், அவருடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும். லோகேஷ் என்னை வித்தியாசமான ஆக்‌ஷனில் காட்ட உள்ளாராம். இந்த கதை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. எப்போதும் போல வெறும் ஆக்‌ஷன் கிங்காக மட்டும் இல்லாமல் இன்னும் தரமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

 எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அர்ஜுனின் இந்த ஸ்டேட்மெண்ட் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எதிர்பார்க்க வைத்துள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் லியோ படத்தின் ஒன்லைனை கேட்டு மிரண்டு விட்டேன் என கூறியிருந்தார். அதேபோல் இயக்குநர் மிஷ்கினும் லியோ ஷூட்டிங்கில் பங்கேற்றது பற்றி ஒரு விழாவில் பேசி ஹைப்பை அதிகப்படுத்திவிட்டார். இந்நிலையில் தற்போது அர்ஜுனும் லியோ படம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. மேலும் படம் முழுக்க ஆக்‌ஷனில் தெறிக்கவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X