போடு வெடிய! ஹாலிவுட் கதாநாயகனைப் போல் இருக்கும் ஆக்ஷன் கிங்! விடாமுயற்சி புது போஸ்டர் ரிலீஸ்!
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் ஒன்று விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், நிக்கில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தினை லைகா தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த வாரம் முடிவு பெற்றது.
ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து படத்தின் மூன்று வகை போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் இரண்டு போஸ்டர்கள் அஜித் குமாருக்காகவே ரிலீஸ் செய்யப்பட்டது. அதன் பின்னர் மூன்றாவது போஸ்டரில் அஜித்துடன் படத்தின் கதாநாயகி த்ரிஷா இருக்கும் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படியான நிலையில், இன்று அதாவது ஜூலை 28ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். படக்குழு தரப்பில் இருந்து அர்ஜுன் உள்ள போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் அர்ஜுன் மிகப்பெரிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டு இருக்கின்றார். போஸ்டரில் அர்ஜுன் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோ போல் உள்ளார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் அந்த போஸ்டரில் அஜித் பேக்கிரவுண்டில் இருப்பதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











