அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் ஹல்தி கொண்டாட்டம்.. வாழ்த்தும் பேன்ஸ்!
சென்னை: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில், ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முன்னணி நடிகரான ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்து வருகிறார். தளபதி விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்தமான நடிகராக மாறிவிட்டார் அர்ஜுன். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

காதல் மலர்ந்தது: ஐஸ்வர்யாவும் நகைச்சுவை தம்பிராமையாவின் மகன் உமாபதியும் காதலித்துவந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவுக்கு தெறிய வர, இருவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தம்பிராமையாவின் மகன்: அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் உமாபதியும் ஒரு போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அர்ஜூனுடன் ஐஸ்வர்யாவும் வந்துள்ளார். அப்போது தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாகச் கூறப்படுகிறது. நடிகர் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியர் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட திருமணம்: இந்நிலையில் இருவருக்கும் ஜூன்10 ஆம் தேதி சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் மும்முரமாக இருந்த அர்ஜூன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமணத்திற்கு வந்து மணமக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என பல நட்சத்திரங்களுக்கும் அர்ஜூன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹல்தி கொண்டாட்டம்: திருமணம் நடக்க இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், ஐஸ்வர்யாவிற்கு ஹல்தி நிகழ்ச்சி இன்று தொடங்கி உள்ளது. அதில், ஐஸ்வர்யா மஞ்சள் உடையில் அழகாக தேவதைபோல் ஜொலிக்கிறாள். இந்த ஹல்தி கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது. பலரும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகை ஐஸ்வர்யா தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் Bali-யில் பேக்சுலரேட் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவும் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
விலை உயர்ந்த பரிசு: நடிகர் நிச்சயதார்த்தத்திற்கு தனது மகளுக்காக பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தையும், மாப்பிள்ளை உமாபதிக்கு வைரம் கலந்த மாணிக்க மோதிரத்தை பரிசாக அளித்திருந்தார். மேலும், இருவருக்கும் உடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தார். தற்போது திருமணத்தை தனது பிடித்த தெய்வமான ஆஞ்சநேயர் கோவிலில் நடத்தி விட்டு, வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பிரபலகங்களின் திருமணத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











