Arjun daughter: அர்ஜுனின் மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் காதல் உருவான கதை!

சென்னை: நடிகர் அர்ஜுனின் மகள் தம்பி ராமையாவின் மகனை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக இருந்த ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அர்ஜுன் தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

Action king Arjuns daughter Aishwarya arjun love story Action

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா: நடிகர் அர்ஜுன் முன்னாள் நடிகை நிவேதிதா என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

காதல் விவகாரம்: ஐஸ்வர்யா அர்ஜுன், நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவுக்கு தெரிந்ததை அடுத்து இருவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில், இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

Action king Arjuns daughter Aishwarya arjun love story Action

காதல் கதை: இந்நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதில், அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் உமாபதியும் ஒரு போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அர்ஜுனுடன் ஐஸ்வர்யாவும் வந்துள்ளார். அப்போது தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

Action king Arjuns daughter Aishwarya arjun love story Action

இளம் நடிகர்: நடிகர் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மணியர் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் உருவாகி வரும் ராஜா கிளி படத்தை இயக்கி இயக்குனராக மாறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X