For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்பி படத்தில்.. கப்பித்தனமான வசனங்கள்.. காட்சிகள்.. சிவசேனா செம டென்ஷன்!

|

சென்னை: யோகி பாபு நடித்துள்ள பப்பி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பப்பி (Puppy) என்று பெயர் வைத்து படம் எடுத்துவிட்டு அந்தப் படத்தை வெளியிடுவதற்குள் பப்பி பக்கா பிரச்சனைகளை சந்திக்கிறது. இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களுக்கு டிஸ்கஷனுக்கு அமர்கிறபோது நல்ல சீன்களுக்குப் பதில் ஏழெட்டு சர்ச்சைகளைத் தான் முதலில் தேடி எடுத்துக்கொள்கிறார்களோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு ஒவ்வொரு படமும் வரிசையாக சர்ச்சைகளுடனேயே களம் இறங்குகின்றன.

Action must be taken against Puppy filmmaker-Shiv Sena

படத்துக்கு பப்ளிசிட்டி தேவை என்று செய்கிறார்களா அல்லது அதுவாகவே நடக்குதா என்ற கேள்வியும் தோணுகிறது. கடந்த வாரம் ரிலீஸான ஜெயம் ரவியின் கோமாளி படம் சரமாரியான சர்ச்சைகளைச் சந்தித்துவரும் நிலையில் அடுத்து வெளியாக உள்ள காமெடி நடிகர் யோகி பாபுவின் பப்பி என்ற படம் ஒரு விநோதமான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. பப்பி படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது.

சென்னை என்னை வசீகரித்தது... குழந்தை ரசிகர்களின் அன்பில் மயக்கிய பாப் பாடகி ஹிதா

அந்தப் போஸ்டர்தான் இப்போது பிரச்சனையாகியுள்ளது. அந்த போஸ்டரில் என்ன சர்ச்சை. ப்ளூ கிராஸ் இது வரையில் எந்த பிரச்சனையும் செய்யாத நிலையில், புது பிரச்சனை துவங்கி உள்ளது.

சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் உள்ளது அதற்கான பதில். அவர் அளித்துள்ள புகாரில், அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும், இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமா எடுத்து முடித்து அதனை வெளியிடுவதற்குள் எத்தனை எத்தனை துன்பங்களடா சாமி, என்று அழுத்துக் கொண்டாலும் எல்லாம் ஒரு விளம்பரம் தான். இது ஒருவேளை ஒரிஜினல் புகாரா அல்லது படக்குழுவினரின் விளம்பர செட்ப்பா என்கிற குழப்பமும் இருக்கவே செய்கிறது. எது எப்படியோ பப்பி குலைக்கும் சத்தம் விரைவில் திரை அரங்கில் கேட்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

English summary
The Shiv Sena party has appealed to the director to take action against the filmmaker who has released the controversial footage of Yogi Babu's film 'Puppy', which is disturbing to the minds of Hindus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more