பாராட்டுக்களை குவிக்கும் ஆக்ஷன் காட்சிகள்... பாராட்டு மழையில் மாஸ்டர்கள்!

சென்னை : நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நெல்சன் காட்சிகள் மற்றும் திரைக்கதையை அமைக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Recommended Video

Beast Vijay Mass dialogue | இந்தி திணிப்பை எதிர்த்த Vijay | Tamil Filmibeat

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவரது ஆக்ஷன், காமெடி உள்ளிட்டவை படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆயினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தில் சிறப்பான காட்சிகள் மற்றும் திரைக்கதையை அமைக்க நெல்சன் தவறிவிட்டார் என்றே விமர்சிக்கப்படுகிறது.

ஹாட்ரிக்கை தவறவிட்ட நெல்சன்

ஹாட்ரிக்கை தவறவிட்ட நெல்சன்

அவரது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் ஹாட்ரிக் அடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நெல்சன் சொதப்பலான கதையை கையில் எடுத்துக் கொண்டு அனைவரையும் ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

வாய்மொழியாக படம் சூப்பர் என்று ரசிகர்கள் திரையரங்க வாயில்களில் கூறும் காட்சிகளை காண முடிகிறது. ஆனால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. முதலில் சிறப்பாக துவங்கிய படம் போகப்போக மெதுவான காட்சி அமைப்புகளையே கொண்டுள்ளது.

சிறப்பான விஜய்

சிறப்பான விஜய்

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் விஜய் வழக்கம்போல ரசிகர்களை ஏமாற்றாத நடிப்பை கொடுத்துள்ளார். இதேபோல விடிவி கணேஷ், செல்வராகவனும் சிறப்பான பாராட்டுக்களை பெற்றுள்ளனர். ஹீரோயின் பூஜா ஹெக்டேவும் நல்ல கமெண்ட்ஸ்களையே பெற்றுள்ளார். அவரது நளினம், கவர்ச்சி, அழகு படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த அனிருத் இசை

ரசிகர்களை கவர்ந்த அனிருத் இசை

இதேபோல அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் நடன அமைப்பும் சிறப்பாக பேசப்பட்டுள்ளது. படத்தின் இரு பாடல்களும் முன்னதாகவே வெளியிடப்பட்டு சிறப்பான கமெண்ட்ஸ்களையும் வியூஸ்களையும் பெற்றது. அது படத்திலும் சிறப்பாகவே எதிரொலித்துள்ளது.

சிறப்பான ஆக்ஷன் காட்சிகள்

சிறப்பான ஆக்ஷன் காட்சிகள்

இதேபோல படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் கோரியோகிராப்பை படத்தில் அன்பறிவ் மேற்கொண்ட நிலையில், துவக்கத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இடையிடையில் வரும் சண்டை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X