தீபிகா, பன்சாலி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - பிளேட்டை திருப்பி போடும் குஜராத் முதல்வர்!

By Vignesh Selvaraj

குஜராத் : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படம் சர்ச்சைக்குரிய கதையால் பல தரப்பிலும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

'பத்மாவதி' படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் படத்தை வெளியிட மாட்டோம் என்று அந்தந்த மாநில முதல்வர்களே அறிவித்துள்ளனர்.

Action should be taken on Deepika Padukone and bhansali, says Yogi adhityanath

இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், நடித்த தீபிகா படுகோனே மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.

கோக்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'பத்மாவதி பட பிரச்னைக்கு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோரே முக்கியக் காரணம். மக்களின் உணர்வுகளோடு யாரும் விளையாடக்கூடாது. சிலர் இதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'படத்துக்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். அவர்களுடன் மக்களின் உணர்வுகளை புண்படுத்திய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், தீபிகா படுகோனே மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X