twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவிடம் விசாரணை.. போட்டி சங்கம் தொடங்கிய டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை.. தயாரிப்பாளர்கள் முடிவு!

    By
    |

    சென்னை: போட்டி சங்கம் தொடங்கிய டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    வெப்சீரிஸ் ஷூட்டிங்.. ஐதராபாத் சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை! வெப்சீரிஸ் ஷூட்டிங்.. ஐதராபாத் சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை!

    தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.

    என்.ராமசாமி

    என்.ராமசாமி


    துணைத் தலைவர்கள் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்ற முரளி தலைவராக வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், மன்னன் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

    டிஜிட்டல் சர்வீஸ்

    டிஜிட்டல் சர்வீஸ்

    புதிதாக தேர்வான நிர்வாகிகள் கலந்துகொண்ட முதல் செயற்குழு கூட்டம், பிலிம்சேம்பர் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் இனி செலுத்தமாட்டார்கள் என்றும் டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனம் 9.12.2020 குள் இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    போட்டி சங்கம்

    போட்டி சங்கம்

    மேலும் எடுக்கப்பட்டுள்ள தீர்மான விவரம்: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றியும் தேர்தலில் வெற்றிபெற்று வந்த நிர்வாகிகள் பற்றியும் அவதூறாகப் பேசி, போட்டி சங்கம் உருவாக்கியுள்ள டி.ராஜேந்தர், சுபாஷ் சந்திரபோஸ், ஜே.எஸ்.ஜே.சதீஷ்குமார், சிங்காரவடிவேலன், கே.ராஜன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கைப்படும்.

    சிம்பு மீதான புகார்

    சிம்பு மீதான புகார்

    தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சிலம்பரசன் மீது கொடுத்த புகார் குறித்து ஏற்கனவே கடந்த நிர்வாகத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் சிலம்பரசனை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காணப்படும்.

    போட்டியிட இயலாது

    போட்டியிட இயலாது

    இனி வரும் காலங்களில் மற்ற எந்த சங்கத்தில் நிர்வாகக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள், நமது தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நிர்வாகப் பதவிக்குப் போட்டியிட இயலாது என்றும் இந்த செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    English summary
    Tamil film Producers' Association has passed a resolution that action will be taken against T. Rajender, who started the Competitive Association.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X