நான் மட்டும் 'சொம்பை' தூக்காம இருந்திருந்தா இன்னேரம் ஐஜி ஆகியிருப்பேன்... வினு சக்கரவர்த்தி
ஈரோடு: நான் மட்டும் நடிகராகியிருக்காவிட்டால் போலீஸில் சேர்ந்து இன்னேரத்திற்கு ஐஜி ஆகியிருப்பேன் என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி.
ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் வினு சக்கரவர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு பேசினார் வினு சக்கரவர்த்தி.
வழக்கம் போல ஜாலியாகவும், கேலியாகவும், சீரியஸாகவும், உணர்ச்சிவசப்பட்டும் பேசிய வினு சக்கரவர்த்தியின் பேச்சிலிருந்து....

முதுகெலும்பை உடைத்த முனி...
முனி படம் எனக்கு ஆயிரமாவது படமாகும். அந்தப் படத்திற்குப் பின்னர் நான் விபத்தில் சிக்கி விட்டேன்.அதில் எனது முதுகெலும்பு பாதிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து லண்டன் போய் எனது மகன், மருமகளிடம் இருந்தேன். அங்கேயே சிகிச்சை பெற்றேன்.

இப்போது தேசிங்குராஜா
சமீபத்தில் இயக்குநர் எழில் என்னைத் தொடர்பு கொண்டு தனது தேசிங்குராஜா படத்தில் நடிக்குமாறு கேட்டார். இதையடுத்து சென்னை வந்து நடித்துக் கொடுத்தேன்.

நான்தான் விமலுக்குத் தாத்தா
தேசிங்குராஜாவில் நான் நடிகர் விமலுக்கு தாத்தா வேடத்தில் நடித்துள்ளேன்.

முதல்ல போலீஸுப்பா நான்
நான் ஆரம்பத்தில் போலீஸில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ரயில்வேக்கு மாறினேன். அப்படியே நடிகராகி விட்டேன்.

அப்படியே இருந்திருந்தா
ஒரு வேளை நான் போலீஸிலேயே இருந்திருந்தால் இன்னேரம் ஐஜி ஆகியிருப்பேன்.

உலகம் முழுக்க பேமஸ் ஆயி்ட்டேனே
ஒருவேளை ஐஜி ஆகியிருந்தால் கொஞ்சம் போலீஸ்காரர்களைத்தான் தெரிந்திருக்கும். ஆனா இப்பதான் நான் உலகம் முழுவதும் தெரிந்தவனாக இருக்கிறேனே...

லக்கி டோக்கன்
ரஜினிகாந்த் எனக்கு லக்கி டோக்கன் என்று பெயர் வைத்தார். அதற்குக்காரணம் நான் நடித்தால் அப்படம் வெற்றி பெறும் என்பதால். அவருடன் 25 படம் நடித்துள்ளேன்.அத்தனையும் சில்வர் ஜூப்ளி...ஹா.

சிம்பு வரைக்கும் நடிச்சுட்டேன்
சிவாஜி முதல் சிம்பு வரைக்கும் நடித்து விட்டேன். நடிகனுக்கு மக்களிடமிருந்து கைத்தட்டல் கிடைக்க வேண்டும். அதுதான் அங்கீகாரம் என்றார் வினுசக்கரவர்த்தி.


Click it and Unblock the Notifications











