»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ராம.நாராயணனை களமிறக்கும் திமுக!

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ராம.நாராயணனை களமிறக்கும் திமுக!

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்தராம.நாராயணனை தலைவராக்க சன் டிவி தரப்பில் மறைமுக முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக மற்றும் அதிமுக ஆகியகட்சிகளின் அரசியல், திரையுலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

தமிழ்த் திரையுலகைப் பொருத்தவரை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் நடிகர் சங்கத்தில் ஏற்கனவே அரசியல் புகுந்துவிட்டது.

திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் நடிகர் சங்கத்தில்நிறைந்துள்ளனர். தற்போதைய தலைவர் விஜயகாந்த் தனிக் கட்சி தொடங்கிஎம்.எல்.ஏ. ஆகி விட்டார்.

விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விஜயகாந்த்மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனால் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுகவும், அதிமுகவும் கடும் முயற்சிகளைதொடங்கியுள்ளன. திமுகவைச் சேர்ந்த நெப்போலியனும், அதிமுகவைச் சேர்ந்தசரத்குமாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

இப்படி நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் புகுந்து விட்டதால், நடிகர் சங்கத்தின் கதிகுறித்து அதன் உறுப்பினர்கள் கவலையுடன் உள்ளனர். இந் நிலையில் தயாரிப்பாளர்சங்கத்திலும் அரசியல் புக ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது. சன்டிவிக்கு எதிராக பல தடைகளை தயாரிப்பாளர் சங்கம் விதித்தது.

இதற்கு திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சன்டிவியில் தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பி வரும் சங்கத்தின் முன்னாள் தலைவர்டிஜி. தியாகராஜன், சங்கத்தின் முடிவை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்ததாகதெரிகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தியாகராஜனைஅதிரடியாக பதவியிலிருந்து நீக்கினர். இதைத் தொடர்ந்து பெரும்சலசலப்பு ஏற்பட்டுசங்கம் உடைந்தது.

பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், தியாகராஜன் நீக்கம் செல்லுபடியாகும் என்றுஅறிவித்ததைத் தொடர்ந்து சலசலப்பு குறைந்தது.

ஆனால் இப்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் சங்கத் தலைவர்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இப்பதவியைப் பிடிக்க கடும் போட்டிஎழுந்துள்ளது. தலைவர் பதவியில் திமுகவைச் சேர்ந்த ஒருவரை அமர வைக்க சன்டிவி மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி அமர்ந்தால்தான் சன் டிவிக்கு சாதகமாக திரையுலகை திருப்ப முடியும் என்றுசன் டிவி கணக்குப் போடுவதாக கூறுகிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், திமுகவைச் சேர்ந்த இயக்குநர் ராம. நாராயணனைதலைவர் தேர்தலில் நிறுத்த சிறு படத் தயாரிப்பாளர்கள் என்ற புதிய குரூப்கிளம்பியுள்ளது.

சிறு பட தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் ராம.நாராயணனை தலைவர் பதவிக்கு நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஹென்றி, கே.ராஜன், கோவைத்தம்பி, அமுதா துரைராஜ்,கலைஞானம், கலைமணி, எடிட்டர் மோகன், ஆர்.சி.சக்தி, சிவசக்தி பாண்டியன்உள்ளிட்ட 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளவர்களில் சிலர் தனியாக சிறு படத்தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் தனி பிரிவாக ஆலோசனை நடத்தியிருப்பதுதயாரிப்பாளர்கள் வட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க நடக்கும் முயற்சி இது என்று சில தயாரிப்பாளர்கள்கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil