நடிகர் சங்க பொதுக்குழு:ரஜினி, கமலுக்கு அழைப்பு
சரத்குமார் தலைமையிலான நடிகர்சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் முதலாவதுபொதுக்குழுக் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளவருமாறு, கமல், ரஜினி மற்றும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும்அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக மனோரமா மற்றும் விஜயக்குமாரும், பொதுசெயலாளராக ராதாரவியும், பொருளாளராககாளையும் தேர்வு செய்யப்பட்டனர்.இதைடுத்து வருகிற 27ம் தேதி சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம்நடைபெறுகிறது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்கூடடத்தில் இதுவரை வகித்து வந்த தலைவர் பொறுப்பை விஜயகாந்த், சரத்குமாரிடம்ஒப்படைக்கிறார்.
விழாவில் கலந்து கொள்ளுமாறு ரஜினி, கமல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்3,000 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ரஜினியும், கமலும், பொதுக்குழுக்கூட்டங்கள் உள்பட நடிகர் சங்க கூட்டங்கள் எதிலுமே கலந்து கொள்வதில்லைஎன்பது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications