லாக்டவுனால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்கள்..ஒரு மாதத்துக்கான உணவுப்பொருட்கள் வழங்கிய நடிகர் ஆதி!

By

சென்னை: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா உதவி இயக்குனர்களுக்கு, நடிகர் ஆதி உதவியுள்ளார்.

மிருகம் படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. இந்தப் படத்தில் ஆதியின் நடிப்பு கவனிக்கப்பட்டது.

இதையடுத்து அறிவழகன் இயக்கிய ஈரம் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதிலும் அவர் நடிப்பு பேசப்பட்டது.

 யாகாவாராயினும் நாகாக்க

யாகாவாராயினும் நாகாக்க

பின்னர் அய்யனார், ஆடுபுலி, வசந்தபாலன் இயக்கிய அரவான், யாகாவாராயினும் நாகாக்க உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில் நடித்துகொண்டே தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். அங்கு குண்டல்லோ கோதாரி, மலுப்பு, ரங்கஸ்தலம், நீவெவ்வரு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் கிளாப் படத்தில் நடித்துவருகிறார்.

லாக்டவுன்

லாக்டவுன்

கொரோனா லாக்டவுனால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 லெட்ஸ் த பிரிட்ஜ்

லெட்ஸ் த பிரிட்ஜ்

அவர்களோடு, உதவி இயக்குனர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதையடுத்து அவர்களுக்கு சிலர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஆதி, தங்களுடைய லெட்ஸ் த பிரிட்ஜ் (Let's the Bridge) என்ற அமைப்பின் மூலம் உதவி இயக்குனர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கி உதவியுள்ளார்.

 உணவு பொருட்கள்

உணவு பொருட்கள்

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: உதவி இயக்குனர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்து, ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டது. அதன்படி, கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், உட்பட சில பகுதிகளில் சிரமப்படும் உதவி இயக்குனர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

 சினிமா நண்பர்கள்

சினிமா நண்பர்கள்

அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் சென்று, ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளோம். இது இருள் சூழ்ந்த காலம் என்றாலும் சினிமா நண்பர்கள் மன உறுதியையும் நம்பிக்கையையும் இழக்காமல் இருக்க, எங்கள் கடமையை செய்துள்ளோம். இவ்வாறு நடிகர் ஆதி கூறியுள்ளார். ஆதியின் இந்த உதவியை சினிமாத்துறையினர் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X