அட செம க்யூட்.. ஆதி, நிக்கி கல்ராணி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

சென்னை: கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட பொதுமக்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆதி. இவர் தமிழில் அறிமுகமான மிருகம் படத்தில், மோசமான பெண் பித்தனாக நடித்திருந்தார். மிருகம் படத்தை தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடுபுலி ஆட்டம், அரவான் யாகவாராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் ஆதி நடிப்பில் பார்ட்னர் திரைப்படம் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Actor Aadhi Pinisetty Nikki Galrani Madurai MeenakshiTemple

சப்தம்: இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆதி, ஈரம், குற்றம், பார்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகனின் சப்தம் படத்தில் நடித்து வருகிறார். அதில், லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவு பெற்று விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா ப்ரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு, தமன் இசையமைத்துள்ளார்.

நிக்கி கல்ராணி காதல் திருமணம்: நடிகர் ஆதி நிக்கி கல்ராணியுடன் இணைந்து மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்ததிலிருந்தே காதல் வயப்பட்டனர். காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடிக்கு 2022ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற இந்த ஜோடிகள் இணையத்தை தெறிக்கவிட்டனர். அதுமட்டுமில்லாவது 100வது திருமண நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினார்கள்.

Actor Aadhi Pinisetty Nikki Galrani Madurai MeenakshiTemple

மதுரை கோவிலில்: இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நிக்கி கல்ராணி ஆதி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் கண்டு கொண்ட பொதுமக்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து இருவரும் ஜோடியாக மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X