ஹீரோவை விட வில்லனுக்குதான் அதிக சம்பளமாம்.. லிங்குசாமி படத்திற்கு பெத்த அமௌண்ட் வாங்கும் ஆதி!

சென்னை: லிங்குசாமி இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி.

தற்போது தெலுங்கில் முதல் முறையாக படம் ஒன்றை இயக்கவுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.

ராம் பொத்தினேனி

ராம் பொத்தினேனி

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக நடிகர்கள் மாதவன், ஆர்யா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் படத்தில் ஆதிதான் வில்லனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ரூ. 4 கோடி சம்பளம்?

ரூ. 4 கோடி சம்பளம்?

இதனிடையே இப்படத்தில் ஆதிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆதிக்கு வில்லனாக நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழில் பல படங்கள்

தமிழில் பல படங்கள்

நடிகர் ஆதி, ஒக்க வி சித்ரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, மிருகம், ஈரம், அய்யனார். ஆடுபுலி, அரவாண் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக யூடர்ன்

கடைசியாக யூடர்ன்

தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார் ஆதி. கடைசியாக யூ டர்ன் என்ற படத்தில் நடித்தார். சமந்தா நடிப்பில் வெளியான இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ரிலீஸ் ஆனது.

பெத்த தொகை

பெத்த தொகை

தற்போது க்ளாப் என்ற பைலிங்குவல் படத்திலும் குட் லக் சகி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் பரிட்சயமான ஆதியை ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் பெரிய தொகையை பேசி வில்லனாக்கியுள்ளார் லிங்குசாமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X