முழுவீச்சில் "பார்ட்னர்" டப்பிங் ... ஆதி வெளியிட்ட வீடியோ!

சென்னை : நடிகர் ஆதி நடித்து வரும் பார்ட்னர் திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரங்கஸ்தலம், யூ டர்ன் ஆகிய படங்களுக்கு பிறகு ஆதி தமிழில் நடித்து வரும் பார்ட்னர் திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஜனரஞ்சகமான காமெடி திரைப்படமாக உருவாகிவரும் பார்ட்னர் படத்தின் டப்பிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்க ஸ்டூடியோவில் இருந்து வீடியோ ஒன்றை நடிகர் ஆதி வெளியிட்டுள்ளார்.

குட்லக் சகி

குட்லக் சகி

மகாநடி,பெண் குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதையில் நடித்து வரும் படம் குட்லக் சகி மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்க இந்த படம் விரைவில் திரையில் வெளியாக இருக்க இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி நடித்துள்ளார்.

அண்ணனாக

அண்ணனாக

கதாநாயகனாக நடித்து வரும் அதே சமயம் சில நல்ல கதைகள் அமைந்தால் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்லும் ஆதி தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ரங்கஸ்தலம் திரைப்படத்தில் ராம் சரணுக்கு அண்ணனாக நடித்து நடிப்பில் அசத்தி இருப்பார். தொடர்ந்து சமந்தாவுடன் யூ டர்ன் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

முதல் முறையாக

முதல் முறையாக

யாகாவாராயினும் நாகாக்க படத்திற்கு பிறகு நேரடி தமிழ் திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நடிகர் ஆதி இப்பொழுது பார்ட்னர், க்ளப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் பார்ட்னர் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் முதல் முறையாக ஜோடி சேரும் படம் இதுவே ஆகும்.

வீடியோ வெளியிட்டுள்ளார்

வீடியோ வெளியிட்டுள்ளார்

கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவாகும் பார்ட்னர் படத்தில் காமெடி நாயகன் யோகிபாபு நடித்து வர படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து இப்போது டப்பிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அளிக்கும் விதமாக டப்பிங் ஸ்டுடியோவில் யோகி பாபுவுடன் இருக்கும் காட்சிக்கு டப்பிங் செய்தவாறு ஆதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் பார்ட்னர் படத்திலிருந்து டீசர், டிரைலர் மற்றும் வெளியீட்டு தேதி ஆகியவை வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X