நிக்கி கல்ராணியை மணந்தார் நடிகர் ஆதி.. தங்க நிற உடையில் ஜொலிக்கும் மணமக்கள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Recommended Video

Aadhi-NikkiGalrani-க்கு கோலாகலமாக திருமணம்; குவியும் ரசிகர்களின் வாழ்த்து! | Filmibeat Tamil

தங்க நிற உடையில் மணமக்கள் இருவரும் மணமேடையை அலங்கரித்தனர். கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் அதிகாரப்பூர்வமாக தற்போது கணவன் மனைவியாக மாறிவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆதி நிக்கி திருமணம்

ஆதி நிக்கி திருமணம்

யாகாவராயினும் நாகாக்க, மரக நாணயம் உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்து கொண்ட நிலையில், இன்று மே 19ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நெற்றியில் பட்டம்

நெற்றியில் பட்டம்

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் தற்போது அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இருவருக்கும் நெற்றியில் பட்டம் கட்டி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

தங்க நிற உடை

தங்க நிற உடை

மணமகன் ஆதி தங்க நிற குர்த்தா உடையில் செம ராயலாக திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். மணமகள் நிக்கி கல்ராணி தங்கம் மற்றும் பச்சை நிறம் கலந்த உடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன. மணக்கோலத்தில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் #NikkiGalrani என்கிற ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகின்றன. சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் மண மக்களை வாழ்த்தி வருகின்றனர். திருமண விழாவில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் வரவேற்பு

விரைவில் வரவேற்பு

திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இருவரும் திட்டமிட்டு இருப்பதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடந்த ஹல்தி விழாவில் நடிகர்கள் நானி, சந்திப் கிஷன், ஆர்யா, சாயிஷா, சிரிஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X