For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தடகள வீரராக மாறிய நடிகர் 'மிருகம்' ஆதி... உற்சாகத்துடன் பேசும் அறிமுக இயக்குனர்!

|

சென்னை: அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஆதி.

மிருகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. ஈரம், அய்யனார், மரகத நாணயம், யூ டர்ன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actor Aadhi turns athlete in his untitled new movie

தெலுங்கில் அவர் நடித்த ரங்கஸ்தலம் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் படத்தில் தடகள விளையாட்டு வீரராக அவர் நடிக்கிறார்.

இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குனர் பிரித்வி, "நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம்.

தங்கைக்கு மாங்கல்யம் தந்துனானே.. பரபர கல்யாண வீடு.. ஆனா கோபி இன்னும் வர்லையேய்யா!

ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் ஆதியை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது,

மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த 'மண்ணின் மைந்தர்கள்' சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்" என அவர் கூறினார்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் பிரித்வி. "இது 'தடகள' விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்" என்றார்.

நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.

பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் மற்றும் குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

English summary
Actor Aadhi is playing lead role in Athletics sports based film, directed by debut filmmaker Prithivi Adithya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more