Ajithkumar: சைவத்துக்கு மாறிய அஜித்.. என்ன காரணம்.. சீக்ரெட்டை உடைத்த விடாமுயற்சி நடிகர்!
சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடாமுயற்சி படம், கடந்த ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு சாமானிய மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.
விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள நிலையிலும் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய படங்களில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்பவர் அஜித். இந்த படத்தில் அது மிஸ்ஸானதில் ரசிகர்கள் அப்செட்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து அஜித்குமார் நடித்திருந்தார். அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதிரடி ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி சென்டிமென்டை இணைத்து எடுக்கப்படும் தன்னுடைய படங்களில் அஜித் குமார் மிகச் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். ஆயினும் நேர்கொண்ட பார்வை, விடாமுயற்சி என சில முயற்சிகளையும் அவர் மேற்கொள்ள தவறுவதில்லை.
மகிழ் திருமேனி பாராட்டு: ஆயினும் அவரது ரசிகர்கள் அஜித்தின் இந்த படங்களையும் வெற்றி பெற வைத்து விடுகின்றனர். அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மெச்சூர்டாக இருப்பதாக இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அஜித் தன்னுடைய ரசிகர்களை அதிகமாக சந்திக்காத நிலையிலும் அவர்கள் அவரை அதிகமாக புரிந்து வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல ரசிகர்கள் மீதான அஜித்தின் புரிதலும் ஆச்சர்யபட வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
அஜித்தின் டயட் பிளான்: இந்த படத்தின் பிரமோஷனுக்காக மகிழ் திருமேனி, ஆரவ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்ததை பார்க்க முடிந்தது. அதில் நடிகர் ஆரவ் கொடுத்த பேட்டியில் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி சூட்டிங்கின்போது சிறப்பான வகையில் டயட்டில் இருந்ததாக கூறியுள்ளார். அவர் அதிகமாக சாப்பிட மாட்டார் என்றும் ஆரவ் தெரிவித்துள்ளார். வழக்கமாக அதிகமான ருசியான உணவுகளை எடுத்துக் கொண்டு வந்த அஜித்குமார் தன்னுடைய எடையை குறைப்பதற்காக தற்போது சைவத்திற்கு மாறி உள்ளதாக ஆரவ் தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் இல்லாத அஜித் படம்: விடாமுயற்சி படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். ஆயினும் அவருக்கு இணையான கேரக்டர்களில் ரெஜினா மற்றும் ஆரவ் இருவரும் இணைந்திருந்தனர். இந்த படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நிலையில் வில்லன்கள் அஜித்தை ஏறி மதிப்பதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன. இவை அஜித்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள நிலையிலும் படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 61 கோடி ரூபாய்களை படம் குவித்துள்ளது. அஜித்தின் குட் பேட் அட்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை ஒட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











