ஆனந்தம் விளையாடும் வீடு... உணர்வுப்பூர்வமான படமாக இருந்தது.. ரிவ்வியூ கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை பார்த்த நடிகர் ஆரி படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் சேரன் இணைந்து லீடிங் ரோலில் நடித்துள்ளார்.
இப்படம் சினிமா பிரபலங்களுக்காக ஸ்பெஷல் ஸ்க்ரினீங் செய்யப்பட்டது. இதில் பாரதிராஜா, நடிகர் ஆரி, நடிகர் கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

உணர்வுப்பூர்வமான படம்
இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் ஆரி படம் குறித்து கூறியதாவது, நந்தா பெரியசாமி சார் இயக்கத்தில் சேரன் சார் நடித்துள்ள குடும்ப படம். சேரன் சார் நடித்தாலே, நல்ல குடும்ப படமாக இருக்கும் என்று தான் இப்படத்தை பார்க்க வந்தேன். இது உணர்வுப்பூர்வமான படமாக இருந்தது. இன்று நாம் ஓடிடியில் நிறைய படங்கள் பார்க்கிறோம், டெக்னாலஜியில் வளர்ந்த படங்கள் பார்க்கிறோம், எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தாலும் உறவுகளுக்குள் மாறாத ஒரு விசயம் அன்பு.

அன்பை சொல்லும் படம்
நம் குடும்பத்திற்குள் உறவுகளுக்குள் நான் சகிப்புதன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், அன்பை நாம் எப்படி பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று இந்தப்படம் சொல்கிறது. மனிதன் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் வாழும் வாழ்க்கையை படம்பிடிப்பதும், அன்பை சொல்வதுமான படங்கள் வருவது குறைந்துள்ளது, அதனை இந்தப்படம் நிறைவேற்றியுள்ளது.

தோளில் தாங்கியிருக்கிறார்
சேரன் என்னுடைய ஆட்டோகிராஃப்பிற்கு அவர்தான் காரணம் நான் சினிமாவில் வர அவர் தான் காரணம், இந்தப்படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் அழகாக செய்துள்ளார். சரவணன் சாருக்கும், சேரன் சாருக்கும் உள்ள உறவு அழகாக காட்டப்பட்டிருந்தது. குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை இதை தான் இந்தப்படம் சொல்கிறது.

அழுத்தமான படம்
உறவுகளுக்காக, உறவுகளை நம்பி இந்தப்படம் ஒரு அழுத்தமான படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் உழைத்த மொத்த கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் என் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இதேபோல் படத்தை பார்த்த நடிகர் கலையரசனும் படம் குறித்த தனது கருத்தை ஷேர் செய்துள்ளார்.

கலையரசன் கருத்து
அவர் கூறியிருப்பதாவது, உறவுகளின் மதிப்பை சொல்லக்கூடிய ஒரு அழகான படம், நீண்ட நாள் கழித்து ஒரு அழகான குடும்பபடம். குடும்பம் எனும் போது அதற்குள் சந்தோஷமும் இருக்கும், பிரச்சனைகளும் இருக்கும், எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டார்கள். அம்மாதிரி மிகவும் உண்ரவுபூர்வமான தருணங்களை, மிக அழகாக உருவாக்கியிருக்கிறார்கள்.

கிராமத்து மனிதர்களை பிரதிபலித்து..
பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அப்படியே கிராமத்து மனிதர்களை பிரதிபலித்திருக்கிறார்கள். கேமரா மியூசிக் எல்லாமே நன்றாக இருந்தது. எல்லோருமே சூப்பராக செய்துள்ளார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அனைவரும் கண்டிப்பாக இப்படம் பாருங்கள்.. என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











