Just In
- 25 min ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 59 min ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 1 hr ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி!
- Sports
சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் "பழைய" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்!
- Finance
ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா? ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்ஷன பார்க்கணுமே!
சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரைக்குமே லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால்சென்டர் டாஸ்க்கு தான்.
கடைசி காலராக ஆரி, வேற வழியே இல்லாமல் ஷிவானிக்கு போன் பண்ணி பேசும் 2வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா? என ஷிவானியிடம் ஒரு வழியாக கேட்டு விட்டார் ஆரி.

காதல் கண்ணை மறைக்குது
பாலாவுக்கு காதல் கண்ணை மறைக்குது எனக் கூறி கன்ஃபெஷன் ரூமில் கடந்த வாரம் ஆரி நாமினேட் பண்ணி இருந்தார். அது அப்படியே ரகசியமாக இருக்கிறதே என கமல் வீக்கெண்டில் கிண்ட, உடனே கையை தூக்கி, நான் தான் அந்த கேள்வியை கேட்டேனுங்க என ஒப்புக் கொண்டார். இந்நிலையில், இன்றைய 2வது புரமோவிலும் அந்த காதல் கண்ணை மறைக்குது பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

பாலா ஷிவானி உறவு
ஆரிக்கு மட்டுமில்லை, பிக் பாஸ் எடிட்டர் இருவருக்கும் இடையே போட்ட லவ் தீம்களை தொடர்ந்து பிக் பாஸ் ரசிகர்களுக்கும், இருவருக்குள்ளும் காதல் இருப்பதாகவே எண்ணி வருகின்றனர். அந்த சந்தேகத்தை பாலா பல முறை எங்களுக்குள் காதல் இல்லை என்று ஓப்பனாக உடைத்தாலும், பாலாஜியின் பேச்சை யாரும் நம்பவில்லை. இந்நிலையில், ஷிவானி ஆரியின் கேள்விக்கு என்ன சொல்லப் போறாங்க என்பதை பார்க்க நிச்சயம் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் இப்பவே காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

ஷிவானி ரியாக்ஷன்
ஆரி கேட்ட கேள்விக்கு ஷிவானி நாராயணன் என்ன சொல்லி இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், பிக் பாஸ் எடிட்டர், வேறு ஒரு ரியாக்ஷனை எடுத்து ஆரி. காதல் பற்றி ஷிவானியிடம் கேட்டதற்கு போட்டுள்ளது சூப்பர். ரம்யா பாண்டியனுக்கும் இப்படித்தான் ரியாக்ஷனை மாற்றி போட்டு புரமோவை சூடு படுத்தியிருந்தனர்.

யாருக்கு வெற்றி
ஆரிக்கும் ஷிவானிக்கும் நடக்கும் இந்த போன் கான்வெர்சேஷனில் ஷிவானியிடம் ஆரி தோற்பதாகவே தெரிகிறது. ஆரியின் கழுத்தில் நாமினேட் செய்யப்பட்டுள்ளேன் என்கிற போர்டு இருப்பதால், ஷிவானி ஆரி கேட்ட கேள்விக்கெல்லாம் சவாலாக கடைசி வரை பதில் சொல்லி போனை கட் பண்ணாமல் வைத்திருப்பார் என்றே தெரிகிறது. பார்க்கலாம்.

மீண்டும் சண்டை வெடிக்குமா
ஏற்கனவே போன் டாஸ்க்கில் ஒவ்வொருத்தருக்கும் இடையே ஏகப்பட்ட சண்டைகள் வெடித்து வரும் நிலையில், ஆரி மீண்டும் பாலாஜி ஷிவானியின் காதல் பற்றிய கேள்வியை எழுப்பிய நிலையில், கான்வர்சேஷன் முடிந்ததும் பாலாவுக்கும் ஆரிக்கும் மறுபடியும் மிகப்பெரிய சண்டை வெடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெடிக்காமல் இருக்குமா? நல்லாவே வெடிக்கும் என்கிற பதில்களும் குவிந்து வருகின்றன.