பிக் பாஸ் வீட்டில் ஃபேவரிஸம் இருக்கு.. முகமூடி கொடுத்ததும் டென்ஷனான ஆரி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் 14ம் நாளில் கமல்ஹாசன், மாஸ்க் மற்றும் பேட்ஜை சக போட்டியாளர்களுக்கு கொடுக்க சொன்னார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிகப்படியான மாஸ்க்கை நடிகர் ரியோ ராஜ் மற்றும் அட்வைஸ் கிங் ஆரி அர்ஜுனாவுக்கு கொடுத்தனர்.

அதிக மாஸ்க் வாங்கிய இருவருமே மிகவும் கோபப்பட்டு, தங்களுக்கு இது கொடுத்திருக்கக் கூடாது என்று வாதாடினார்கள்.

அதிக மாஸ்க்

அதிக மாஸ்க்

ஜூனியர் பாபிசிம்ஹா ஆஜீத் முதல் நடிகை ரேகா வரை வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து வைத்து அட்வைஸ் பண்ணி பிக் பாஸ் வீட்டின் சமுத்திரகனியாக மாறியதால், அவரது டார்ச்சர் தாங்க முடியாமல், ஏகப்பட்ட மாஸ்க்குகளை அவருக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் மாட்டி விட்டனர்.

கடுப்பான ஆரி

கடுப்பான ஆரி

அதிகப்படியான மாஸ்க் பெற்ற ஆரியிடம், கமல் இது உங்களுக்கு சரியா படுதா என கேள்வி கேட்டு கொளுத்திப் போட அவர் பட்டாசாய் வெடித்துத் தள்ளினார். தொடர்ந்து தனது பக்கம் உள்ள நியாயத்தையும் கோபம் கலந்த முகத்துடன் ஆரி ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்தார்.

ஃபேவரிஸம்

ஃபேவரிஸம்

பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே குரூபிஸம் பிரச்சனை நிலவி பஞ்சாயத்தை கிளப்பி வரும் நிலையில், நடிகர் ஆரி புதுசா இந்த வீட்டில் ஃபேவரிஸம் இருக்கு என புது குண்டை போட்டுள்ளார். அதற்காக ரியோவை வைத்தே ஆரி சொன்ன அந்த விஷயம் அடுத்த வாரம் இருவருக்குமிடையே பிரச்சனைகளை கிளப்பும் என்றே தெரிகிறது.

லைனா கொடுத்துட்டாங்க

லைனா கொடுத்துட்டாங்க

இப்ப கூட பாருங்க, நண்பர் ரியோவுக்கு நான் மாஸ்க் போட்டேன். லைனா ஒவ்வொரு ஆளா ரியோவுக்கு மாஸ்க் போட ஆரம்பிச்சுட்டாங்க, யாரும் சொந்தமா சுயமா அவங்களோட கேமை ஆட மாட்றாங்க அதைத் தான் நான் சொன்னேன். ஆனால், நான் முகமூடி போட்டுக்கிட்டு இந்த வீட்ல சுத்துறேன்னு சொல்றாங்க என புலம்பினார்.

யாரையும் தெரியாது

யாரையும் தெரியாது

தனிப்பட்ட முறையில் எனக்கு இங்க இருக்கிற யாரையும் தெரியாது. பல பேர் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள். அதனால், தான் என்னோட செயல்பாடுகள் அவர்களுக்கு அட்வைஸா தெரியுதுன்னு சொல்றாங்க, ஆஜீத்துக்கு மட்டும் தான் நான் அட்வைஸ் பண்ணேன் என்றும் பொங்கி எழுந்தார். சீக்கிரமே வேற ஆரியை பார்க்கலாம் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X