அந்த படம் வந்து 7 வருஷம் ஆச்சாம்.. படக்குழுவுக்கு நன்றி சொல்லி கொண்டாடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!
சென்னை: நெடுஞ்சாலை திரைப்படம் வெளியாகி 7 வருடங்கள் ஆனதை முன்னிட்டு நடிகர் ஆரி சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார்.
ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜூனன். தொடர்ந்து ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்தலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார். தற்போது அலேகா, பகவான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

நேர்மையாக விளையாடிய ஆரி
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆரி. இதில் நிதானமாகவும் நேர்மையாகவும் விளையாடினார் ஆரி. ஹவுஸ்மேட்ஸ் பலரும் அவருக்கு எதிராய் இருந்தபோதும் விடாமுயற்சியுடன் விளையாடினார்.

நெடுஞ்சாலை 7 வருடங்கள்
இதனால் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்றார். இந்நிலையில் ஆரி அர்ஜூனன் நடித்த நெடுஞ்சாலை படம் வெளியாகி 7 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அதனை டிவிட்டரில் பதிவிட்டு கொண்டாடியுள்ளார் ஆரி.

என் கிருஷ்ணா இயக்கம்
நெடுஞ்சாலை படத்தை என் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ஆரிக்கு ஜோடியாக சுஷிவதா நடித்திருந்தார். மேலும் பிரசாந்த் நாராயணன், தம்பி ராமையா, சலீம் குமார், அஷ்வின் ராஜா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

தார்பாய் முருகன்
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் நடிகர் ஆரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் நெடுஞ்சாலை படத்தில் என்னை நடிக்க வைத்த கிருஷ்ணா சார் மற்றும் மொத்த படக்குழுவுக்கும் நன்றி.. தார்பாய் முருகன் கதாப்பாத்திரத்தை என்ஜாய் செய்தேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











