பிக் பாஸ் ஆரியின் அடுத்த பட அறிவிப்பு... எதிர்பாரா கூட்டணி !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஆரிஅர்ஜுனன் தனது புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆரி தற்போது எல்லாம் இருக்குறவன் பார்த்துபான், அலெகா, பகவான் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி நடித்துள்ளார்.

ஆரி அர்ஜுனன்
நடிகர் ஆரி அர்ஜுனன் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த பாடத்தில் லாரி ஓட்டுநராக மூக்கில் கடுக்கன் என வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார் ஆரி. இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.

மாயா படத்தில்
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த பாடம் த்ரில்லிங்கான படமாக இருந்தது. நயன்தாராவுடன் நடித்த பிறகுதான் ஓரளவுக்கு மக்களுக்கு இவர் முகம் பரீச்சியமானது.

டைட்டில் வின்னர்
உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் கிடைத்த வாய்ப்பில் நடித்தார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக இருந்தார். இவரின் அமைதி, எதார்த்ததால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, பிக் பாஸ் சீசன்4ல் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.

புதிய படத்தில்
ஆரி அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குனர் பாக்யராஜ், அமீர், அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் சிவி குமார். ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோரின் ஆசியுடன் நான் நடிக்கும் புதிய திரைப்படம் ஊட்டியில் தொடங்குகிறது. எஸ்.ஏ.எஸ் தயாரிக்கும் இந்த படத்தை அஞ்சு குரியன் நடிக்கிறார். கண்மணி படப்புகழ் மணிவர்மன் இயக்குகிறார் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











