Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த புத்தாண்டு முதல் எனது பெயர் ஆரி அர்ஜூனா
சென்னை: நடிகர் ஆரி தனது பெயரை ஆரி அர்ஜூனா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இதை அவரே அறிக்கை மூலம் கூறியுள்ளார்.
நடிகர் ஆரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தற்போது தனது பெயரை மாற்றியுள்ளார் ஆரி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
மதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ஆரி. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன்
இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றியுள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அர்ஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அர்ஜுனா.