twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கிய ஆரி !

    |

    சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிக்பாஸ் வின்னர் நடிகர் ஆரி பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6,618 பேருக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    Actor Aari gives mask to Coimbatore People

    சென்னயில் மட்டும் 2,214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கொரேனா இரண்டாவது அலை கோர தாண்டவர் ஆடி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகததில் 6,618 பேருக்க கொரோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாது அலை வீரியம் மிக்கதாக உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் நிலைமை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழசிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். அதில், தடுப்பு நடவடிக்கைகள், புதிய காட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான நடிகர் ஆரி கோவையில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாஸ்க் இன்றி பைக்கிள் வந்தவர்களை நிறுத்தியும், முகக்கவசம் இல்லாமல் இருந்துவர்களிடம் கட்டாயம் முகக்கவம் போடும்படியும் அறிவுரைகூறினார். அவரின் இந்த முயற்சியை பலரு ம் பாராட்டினர்.

    English summary
    Actor Aari gives mask to Coimbatore People
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X