சுண்டல் விற்கும் பெண்ணாகவே மாறிய அர்ச்சனா.. ஆரிக்கும், சம்யுக்தாவுக்கும் இதிலேயும் சண்டை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் அன்சீனுக்கு போட வேண்டும் என்றே ஏகப்பட்ட காட்சிகளை எடுப்பது போல, ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதில் ஒரு சில காட்சிகளை மெயின் எபிசோடில் வச்சு ரொம்பவே டார்ச்சர் பண்றாங்க..
நவரசம், ஜோசியம் டாஸ்க்குகளை தொடர்ந்து இப்போ பீச்சில் சுண்டல் வைக்கும் டாஸ்க் அரங்கேறியது.

சுண்டல் விற்கும் பெண்ணாகவே
அர்ச்சனாவை ஏன் பா இத்தனை நாள் ஆங்கராகவே வச்சுட்டு இருந்தீங்க, அவர் என்ன மாதிரியான ஒரு நடிகை என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் தெரிகிறது. சுண்டல் விற்கும் பெண்ணாக அப்படியே, கேரக்டரில் ஒன்றி நடித்து அசத்தியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அசிஸ்டன்ட் பாலாஜி
பாலாஜி முருகதாஸ் பற்றி வெளியே தான் சர்ச்சைகள் வெறித்தனமாக வெடித்து வருகின்றன. ஆனால், அவர் இன்னமும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே செம கூலாகத்தான் சுற்றி வருகிறார். சுண்டல் விற்கும் அர்ச்சனா, வேலை வெட்டி இல்லாத பாலாஜியை தனது அசிஸ்டன்ட்டாக சேர்த்துக் கொண்ட போதும் ஷிவானி பின்னாடி தான் ஜொள்ளு விட்டு வருகிறார்.

சுருட்டு கேட்ட ஷிவானி
பாலாஜி முருகதஸை அல்லக்கையாக மாற்றி விட்டு சூடு பறக்க சுண்டல், பூ என எல்லாவற்றையும் விற்க ஆரம்பித்து விட்டார் அர்ச்சனா அக்கா. ஷிவானியிடம் வம்படியாக சென்று, பூ வேண்டுமா என கேட்க அவர், ஒரு சுருட்டை தாங்க என சொன்னதை வைத்து, என்னது சுருட்டு வேண்டுமா? என அர்ச்சனா ரொம்பவே பங்கம் பண்ணி விட்டார்.

விடாது கருப்பு
சுண்டல் டாஸ்க்கில் எல்லாரும் கிண்டலாக பண்ணிக் கொண்டிருக்கும் போது, நடிகர் ஆரியும் இறங்கி சுண்டல் விற்க ஆரம்பித்தார். அனிதா சம்பத், நிஷா அக்கா எல்லாம் சுண்டல் வாங்க மாட்டாங்க என நக்கல் பண்ணி விட்டு, ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி பக்கம் வந்து சுண்டல் விற்க ஆரம்பித்தார். பின்னர், கேபி, சம்யுக்தா பக்கம் செல்லும் போது, அவர் பாஸ் பண்ண கமெண்ட்டால் காண்டானார்.

நடிக்கணுமா வேண்டாமா
சம்யுக்தா ஆரி கிட்ட வந்தவுடன் அவரை பற்றி கேபியிடம் முணுமுணுக்க, நான் இப்போ நடிக்கணுமா? வேண்டாமா? என சூடாகி விட்டார் ஆரி. இன்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யமாக எந்தவொரு சண்டையும் இல்லாத நிலையில், இந்த சுண்டல் சண்டையை கிளப்ப பிக் பாஸ் நினைத்தார். ஆனால், அர்ச்சனா அக்கா போதும் விட்ருங்க என ஆஃப் செய்து விட்டார்.

நடிக்கவே தெரியல
ஜித்தன் ரமேஷுக்கு படத்தில் தான் சரியாக நடிக்கத் தெரியவில்லை என்றால், சுண்டல் விற்கும் நபராக கூட நடிக்கத் தெரியவில்லையே என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர். ரொம்ப மொக்கையா போவதை பார்த்த பிக் பாஸ் எடிட்டர் உடனே அந்த சீனை கட் பண்ணிட்டு அடுத்த ஒரு சூர மொக்கை கோர்ட் சீனுக்கு சென்று விட்டார்.


Click it and Unblock the Notifications











