பகவான் பட கதாநாயகியை வீடியோ மூலம் அறிமுகப்படுத்திய நடிகர் ஆரி!
சென்னை : தமிழ் சினிமாவில் முதல் இலுமினாட்டி திரைப்படமாக பகவான் உருவாகி வருகிறது.
ஆரி வித்தியாசமான தோற்றத்தில் இதில் ஹீரோவாக நடித்து வர இயக்குனர் கலைஞன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது இப்படத்தின் கதாநாயகியை ஆரி வீடியோவை வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இயற்கை விவசாயத்தை
ஆடும் கூத்து, ரெட்டைசுழி,மாலை நேரத்து மயக்கம், நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஆரி. நடிகராக மட்டுமல்லாமல் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பகவான் ஃபர்ஸ்ட்
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று மகத்தான வெற்றியை பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே ஆரியின் பகவான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. நீண்ட தலைமுடியுடன் பார்க்கவே வித்தியாசமாக ஆரி இருக்கும் இந்த பகவான் திரைப்படம் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் என கூறப்படுகிறது.
Recommended Video

வீடியோ மூலம்
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பகவான் பட கதாநாயகி பூஜிதா பொன்னாடாவை வீடியோவை வெளியிட்டு அறிமுக படுத்தியுள்ளார் .

இரண்டு நாள் படப்பிடிப்பு
மேலும் பூஜிதா பொன்னாடாவின் காட்சிகள் இன்றுடன் முடிந்து விட்டது எனவும் தனக்கு இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு இருக்கின்றது எனவும் ஆரி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பகவான் பற்றிய பல அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ஆரிக்கு அலேகா , எல்லாம் மேலே இருக்குறவன் பார்த்துகுவான், மற்றும் இயக்குனர் அபின் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











