விஜய் சேதுபதி ஹீரோவாக உருவாக காரணமாக இருந்த ஆரி! எப்படி நடந்தது?
சென்னை : இந்திய அளவில் புகழ் மிக்க நடிகராக உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர். இவரது திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய பிசினஸ் செய்து வருகிறது
இந்த நிலையில் விஜய் சேதுபதி ஹீரோவாக உருவாக நடிகர் ஆரி முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரங்களிலும்
நடிகர் விஜய் சேதுபதியை தென்னிந்தியாவை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய தொகைக்கு
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி,கமல்ஹாசனுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில் படத்தில் நடித்து வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது. மேலும் இதுவரை தமிழ் திரைத்துறை காணாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிசினஸ் ஆகியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கின்றது.

முக்கோண காதல்
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படம் வித்தியாசமான காதல் கதையை கொண்டு உருவாகி வருகிறது. நயன்தாரா, சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய் சேதுபதியின் கெரியரிலேயே மிக வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்ரீனா கைஃப்க்கு ஜோடியாக
தமிழைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் விஜய்சேதுபதி நடித்து வர பாலிவுட்டிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் டி கே மற்றும் ராஜ் இயக்கத்தில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கும் பிரம்மாண்ட வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.காந்தி டாக்ஸ், மும்பைக் கர் மற்றும் கத்ரீனா கைஃப்க்கு ஜோடியாக ஒரு படத்திலும் இப்பொழுது நடித்து வருகிறார்

ஹீரோவாக அறிமுகமானார்
ஆரம்ப காலகட்டங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நண்பர்கள் ரோலில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருப்பார் தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளிய இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் நடிகர் ஆரி தான்.
Recommended Video

முதல் சாய்ஸ் ஆரி
இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக முதலில் ஆரியை தேர்வு செய்திருந்தார் அதற்காக ஆரியை சந்திக்க சொல்லி கேட்டுள்ளார் . சந்திக்க செல்லும் நேரத்தில் திடீரென எதிர்பாராத அவசர வேலை காரணமாக ஆரியால் அன்று சந்திக்க முடியவில்லை. எனவே மற்றொரு நாள் சந்திக்கலாம் என இயக்குனரிடம் கேட்டதற்கு சொல்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் தான் நடிகர் அருள்தாஸ் மூலமாக விஜய் சேதுபதி சீனு ராமசாமியை சந்தித்ததில் இந்த படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்பொழுது தமிழ்சினிமாவை ஆண்டு கொண்டும் உள்ளார் . இந்த தகவலை நடிகர் ஆரி சமீபத்திய படவிழா ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











