twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளி அரசியலை பேசுவதற்கு முன் சினிமாவில் உள்ள அரசியலைப் பற்றி பேசுங்கள்: ஆரி!

    திரைப்பட வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் என நடிகர் ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    |

    சென்னை: சினிமா துறையில் உள்ளவர்கள் முதலில் இங்குள்ள அரசியலை பற்றி பேசிவிட்டு, பின்னர் வெளியில் உள்ள அரசியலை பற்றி பேசலாம் என நடிகர் ஆரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஐயப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'தோனி கபடி குழு'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி கலந்துகொண்டு இசையை வெளியிட்டார்.

    விழாவில் பேசிய அவர், தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் இங்குள்ள அரசியலை பற்றி பேசிவிட்டு, பின்னர் வெளியில் உள்ள அரசியலை பற்றி பேசலாம் எனக் கூறினார்.

    சிபாரிசு செய்தால் மிட்நைட் பார்ட்டி... நடிகையின் புதிய ஆஃபரால் நடிகர்கள் ஹேப்பி! சிபாரிசு செய்தால் மிட்நைட் பார்ட்டி... நடிகையின் புதிய ஆஃபரால் நடிகர்கள் ஹேப்பி!

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

    தமிழக அரசு மீது வருத்தம்

    தமிழக அரசு மீது வருத்தம்

    "‘தோனி கபடி குழு' படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அப்புக்குட்டி கூறினார், ‘குடி' இல்லாமல் ஒரு ட்ரைலரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று. படக்குழுவினர் ‘குடி'யை நம்பி படம் எடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியளித்தாலும் தமிழக அரசு இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவே மதுக்கடைகளை நடத்துகிறது என்பது வருத்தமாகத்தான் உள்ளது.

    கூடிய விரைவில் இயக்குனராவார்

    கூடிய விரைவில் இயக்குனராவார்

    அபிலாஷ் நடிகரைத் தாண்டி கூடிய விரைவில் இயக்குநராகி விடுவார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. தன்னைக் கூட பார்த்துக் கொள்ள நேரமில்லாமல் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தமிழ் சினிமா உங்களுக்கென்று ஒரு இடத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

    குழந்தை நட்சத்திரம் லீமா

    குழந்தை நட்சத்திரம் லீமா

    ‘இரட்டைச்சுழி' படத்திலிருந்தே லீமாவைத் தெரியும். குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். சினிமா பின்னணியில்லாத ஒரு பெண் இன்று கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வெளி அரசியல்

    வெளி அரசியல்

    வெளியில் உள்ள அரசியலை பேசுவதற்கு முன்பு சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றி பேச வேண்டும். இன்றைய சூழலில் எந்த மாதிரியான படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்றால் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அது ‘சர்காரில்' ஆரம்பித்து ‘தோனி கபடி குழு' வரையில் பிரச்னை இருக்கத்தான் போகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தன்னுடைய படங்கள் தான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. பெரிய படம் வந்ததால் சிறிய படங்கள் ஓடவில்லை என்று இன்று கூட செய்திகள் வந்தது. EC உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டார்கள்.

    ஆபத்தான சூழல்

    ஆபத்தான சூழல்

    சினிமா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்றுவிடும். இதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தவில்லையென்றால் மொத்த திரையரங்கங்களையும் இழுத்துமூட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். சினிமாவை இப்போது காப்பாற்றவில்லையென்றால், சினிமாவும் அதை சார்ந்தோர்களும் முடங்கிப் போகும் வாய்ப்பு அதிகம்.

    மிரட்டும் கடன்காரர்கள்

    மிரட்டும் கடன்காரர்கள்

    எங்களுக்கு இருக்கும் பணப் பிரச்னைகளை சரிசெய்தால் தான் நாங்கள் உங்கள் படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுவதும் தடுக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்திடம் படத்தை வெளியிட மறுதேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. விநியோகதஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் போன்ற அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட்டு சினிமாவைக் காப்பாற்றாமல் விட்டால், தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக வேறொருவர் கையில் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுவோம்.

    அரசியல் பேசவில்லை

    அரசியல் பேசவில்லை

    இவற்றையெல்லாம் கூறினால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியல் பேசுகிறார்கள்? என்று கூறுகின்றனர். நாங்கள் அரசியல் பேசவில்லை. அரசியல்வாதிகள் தங்களது கடமைகளை சரிவர செய்திருந்தால், எங்களுக்கு வேலையே இருந்திருக்காது என்பதை திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறோம்"

    இவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.

    English summary
    While speaking in the audio launch function of Dhoni kabadi kuzhu, actor Aari criticised the sysytem of tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X