என்ன மனுஷன்யா.. குளிரில் குறுக்கி கொண்டு படுத்திருந்த ஆஜித்.. ஆரி செய்த காரியத்த பாருங்க!
சென்னை: நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் நடிகர் ஆரி செய்ய அந்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரியும் பங்கேற்றுள்ளளார். மற்றவர்களுடன் ரொம்பவே மெச்சுரிட்டியுடன் பழகி வருகிறார்.
நேற்றைய டாஸ்க்கின் போதும் கூட புரோக்கன் ஹார்ட்டை கொடுக்கும் போது உண்மையான காரணத்தை சொல்லி மனம் நோகாதப்படி நடந்து கொண்டார்.

வீடியோ வைரல்
இதற்காகவே சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரி செய்த வேலை ஒன்று இன்று வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.

குளிரில் குறுக்கிக்கொண்டு
அதாவது ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் பெட்ரூமில் படுக்காமல் லிவிங் ஏரியாவிலேயே அங்கிருந்த சோஃபாவில் படுத்து தூங்கிக் கொண்டு இருக்கின்றனர். அங்கு போர்வை கூட இல்லாமல் குளிரில் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தார் பாடகர் ஆஜித்.

என்ன மனுஷன்யா நீ!
இதனை பார்த்த ஆரி, பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த ஒரு டவலை எடுத்து வந்து ஆஜித்துக்கு போர்த்திவிட்டு செல்கிறார். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன மனுஷன்யா நீ என ஆரியை பாராட்டி வருகின்றனர்.

பாராட்டாம இருக்க முடியல
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், பெஸ்ட் மொமென்ட்.. ஆரி அர்ஜூனன் நல்ல மனுஷன்யா நீ ஆரம்பத்துல முடிவு எடுக்குறது தப்புதான் இருந்தாலும் பாராட்டாம இருக்க முடியல.. என பதிவிட்டுள்ளார்.

ஒன்னும் இல்லே
மற்றொரு நெட்டிசனான இவர் ஆரி அர்சுணன் பின்றியேப்பா!.... ஆன இந்த அண்ணன்கிட்டகொடுக்க இப்ப ஒண்ணும் இல்லேப்பா! என வடிவேலுவின் போட்டோவை போட்டு ஃபீல் பண்ணியுள்ளார்.


Click it and Unblock the Notifications











