அவ்ளோ தானா பயில்வான்.. அப்படி பயந்து ஓடுறீங்க.. வாய் மட்டுமே வச்சிக்கிட்டு நீங்களும் தான் ஆடுறீங்க!
சென்னை: சம்யுக்தா, ஆரி பஞ்சாயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாலாஜி தனியாக ஒரு கேமை விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ஆரி, பாலா சொன்ன 'தறுதலை' வார்த்தையை பயன்படுத்தி சம்யுக்தாவை மறைமுகமாக திட்டித் தீர்த்த நிலையில், சம்யுக்தாவுக்கு ஆதரவாக பேச வந்த பாலா, பதிலுக்கு, சனமை திட்டுவது போல, ஆரியை பார்த்து "முட்டாப் பயலே" அப்படின்னு ஒரு பொண்ணு என்னை திட்டுனா, நானும் நீ தான் டி முட்டாள் என சொல்வேன் என்றார்.
வாதாடு மன்றத்தை தாண்டி இந்த பிரச்சனை கார்டன் ஏரியாவில் பெரிய சண்டையாக முற்றியது.

இப்போ தான் நல்லா இருக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னடா ஒரே அழுகாச்சி சீரியலா வச்சி ஓட்டுறாங்களே என ஃபீல் பண்ண பிக் பாஸ் ரசிகர்கள், சுசித்ரா வரவுக்கு பின்னாடி, இப்போ தான் நல்லா இருக்கு, விட்டா அடிச்சிப்பாங்க போல இருக்கே, அந்த அளவுக்கு எகிறி எகிறி சண்டை போட்டுக்கிறாங்க என ரசிகர்கள் ஹேப்பி ஆகி உள்ளனர்.

ஐஏஎஸ் படிச்சிட்டு வர முடியாது
ஆரியை ஒருமையில் பேசி திட்டி விட்டு, பின்னர் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கார்டன் ஏரியாவுக்கு கூப்பிட்ட சம்யுக்தா, தலைவியாக தான் தேர்வானதற்காக வருத்தப் பட மாட்டேன். இதுக்காக நான் ஐஏஎஸ் படிச்சிட்டு வர முடியாது, இந்த வாரம் நான் கேப்டனாக இருந்து தான் ஆகணும் என ஆரம்பமே ஆரியை நோஸ் கட் பண்ணிவிட்டு அப்புறம் சமாதானம் பேச சொன்னால் நடக்குமா?

சுசித்ரா, பாலா சேட்டை
போகிற போக்கை பார்த்தால், ஷிவானிக்கு பதிலாக சுசித்ரா, பாலாவை உஷார் பண்ணிடுவாங்க போல, அந்த அளவுக்கு பாலா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, சம்யுக்தா பேசியவுடன் கைத்தட்டி சேட்டை செய்ய, கூடவே பாலாவும் கைத்தட்ட, அதை பார்த்த ஆரிக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்து விட்டது.

சரியான சண்டை
வெறும் வாயை மட்டுமே நம்பி, பிக் பாஸ் வீட்டில் வாழ்கிறார் ஆரி என பாலாஜி முருகதாஸ், கொஞ்சம் கூட அறிவில்லாமல் பேசியதை கேட்ட உடன் ஆரி, அவரை அடிப்பது போலவே எகிறிட்டுப் போனார். ரியோ ராஜ் மற்றும் சில ஹவுஸ்மேட்கள் அவரை தடுக்கவே பிக் பாஸ் வீடே வாய்ச் சண்டை வீடானது.

பாலாஜி நீங்களும் தான்
ஆரியை மட்டும் அப்படி சொல்றீங்களே, நீங்களும் வெறும் வாயை மட்டுமே நம்பிட்டுத் தான் இந்த பிக் பாஸ் கேம் ஷோவில் விளையாடுறீங்க, என பிக் பாஸ் ரசிகர்கள் மீண்டும் ஆரிக்கு சாதகமாகவே கருத்துக்களை #Aari என்ற ஹாஷ்டேக்கில் பதிவிட்டனர். மேலும், பாலா எல்லாரையும் ஈசியா இழிவா பேசிட்டு, நல்லவர் போல நடிக்கிறார் என்றும் திட்டி வருகின்றனர்.

பயந்து ஓடிய பாலா
ஆரி, பாலாவிடம் நெருங்கி அடிப்பது போன்ற தொனியில் பேச ஆரம்பித்தவுடன், எந்திரிச்ச பாலா, ஆரியை அடிக்க முற்படுவார், கைகலப்பு நடக்குமா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்றும் ஏமாற்றம் தான். ஆரியின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அந்த இடத்தில் இருந்து பெட்ரூமுக்கு ஓடி ஒளிந்து கொண்டார் பாலா. கடைசி வரைக்கும் சனம் ‘அட்ஜெஸ்ட்மென்ட்' மேட்டரை அப்படியே மறைச்சிட்டீங்களே பிக் பாஸ்?


Click it and Unblock the Notifications











