twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாண்டவர் அணி உடைய காரணமே விஷால்தான்.. அது மட்டுமா..? அப்பப்பா.. பொறிந்து தள்ளிய நடிகர் ஆரி!

    |

    Recommended Video

    Actor Aari: நடிகர் சங்க தேர்தல் தற்காலிகமாக ரத்து, பொறிந்து தள்ளிய ஆரி- வீடியோ

    சென்னை: பாண்டவர் அணி உடைய காரணமே நடிகர் விஷால்தான் என நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார்.

    நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பாண்டவர் அணியினரும் சுவாமி சங்கர்தாஸ் அணியினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் ஆரி பாண்வர் அணி மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். குறிப்பாக நடிகர் விஷாலை சரமாரியாக விளாசியிருக்கிறார் ஆரி. செய்தியாளர்களிடம் நடிகர் ஆரி பேசியதாவது,

    இஸ்லாமியரை காதலிப்பதால் ரித்திக் ரோஷன் சகோதரியை அடிக்கிறார்கள்: பரபரப்பு புகார் இஸ்லாமியரை காதலிப்பதால் ரித்திக் ரோஷன் சகோதரியை அடிக்கிறார்கள்: பரபரப்பு புகார்

    உடந்தையாக இருப்பவர்களும் குற்றவாளிகள்

    உடந்தையாக இருப்பவர்களும் குற்றவாளிகள்

    நடிகர் சங்க இடத்தை மீட்டுக் கட்டித்தை கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து கடந்த தேர்தலை சந்தித்து பாண்டவர் அணி வெற்றியும் பெற்றது.
    வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் பொது செயலாளர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை சந்தித்தார்.

    பாண்டவர் அணி அதிர்ச்சி

    பாண்டவர் அணி அதிர்ச்சி

    அப்போதே நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பாண்டவர் அணியினருக்குமே விஷால் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதன்பிறகு நடிகர் சங்க பதவிகாலம் முடியும் முன்பே ஆர் கே நகர் இடைதேர்தலில் நிற்கும் முடிவை எடுத்தார்.
    இவரின் தன்னிச்சையான முடிவால் நடிகர் சங்க உறுப்பினர்களும் பாண்டவர் அணியினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

    பொண்வண்ணன் ராஜினாமா

    பொண்வண்ணன் ராஜினாமா

    ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து விஷால் பாண்டவர் அணியில் கூட கலந்து ஆலோசிக்கவில்லை. இது பாண்டவர் அணியில் முதல் பிளவை உண்டாக்கியது. இதன் காரணமாகதான் அன்று துணைத் தலைவராக இருந்த பொண்வண்ணன் ராஜினாமா முடிவை மேற்கொண்டார். தன்னை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்தித்தார்.

    செயற்குழுவில் பங்கேற்வில்லை

    செயற்குழுவில் பங்கேற்வில்லை

    இவர் எப்படி ஒரே நேரத்தில் இத்தனை பதவிகளை சமாளிக்க முடியும். ஏன் இவர் சங்க பதவியை தனது முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டார். சுமார் 15க்கும் மேற்பட்ட செயற்குழு கூட்டத்தில் விஷால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவரைப்போலவே அண்ணன் கருணாஸ் அவர்களும் இரண்டு செயற்குழு கூட்டத்திற்கு மேல் கலந்து கொள்ளவில்லை.

    தனிப்பட்ட வெறுப்பில்லை

    தனிப்பட்ட வெறுப்பில்லை

    பொது தேர்தலில் நிற்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் எங்களின் பிரதிநிதியாக தேர்தெடுக்கப்பட்ட அவர் எப்படி அரசியலில் நின்றார். இதனால் அரசுக்கும் சங்கத்திற்கமான நல்லுறவு துண்டிக்க படும் என ஏன் அவர் எண்ணிப்பார்க்கவில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் அரசியல் களத்தில் இறங்கி இருக்கலாம். இதுவே என் போன்ற சக உறுப்பினர்களின் எண்ணம். அவர் சங்கத்தில் பதவியில் வேண்டாம் என்று சொல்ல காரணம் வேறு தனிப்பட்ட எந்த வெறுப்பும் இல்லை.

    வேறு திட்டங்கள் தீட்டியிருக்கிறோம்

    வேறு திட்டங்கள் தீட்டியிருக்கிறோம்

    விஷாலை தவிர்த்து வேறொருவரை விஷாலே முன்மொழியலாம். ஒற்றுமையாக ஒரே அணியாக இருந்து செயல்படலாம் எனவும்
    வலியுறுத்தினோம். ஆனால் இதனை விஷாலும் நாசர் தலைமையிலான அணியும் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் குறிப்பிட்ட காலத்தில் கட்டிடத்தை கட்டாத காரணத்தாலும் இனியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மூத்த கலைஞர்களை மீண்டும் சிரமபடுத்தி கட்டிடத்திற்கு நிதி சேர்க்கும் சூழ்நிலையை உருவாக்காமல் வேறு திட்டங்கள் தீட்டி உள்ளோம்.

    விஷால் மற்றும் கார்த்தி ஏழையா?

    விஷால் மற்றும் கார்த்தி ஏழையா?

    விஷால் அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் பின்னால் சென்றதாக பேசுகிறார். விஷால் மற்றும் கார்த்தி ஏழையா?
    ஏழைகளின் கையில்தான் சங்கம் இருக்க வேண்டும் என்றால் நாடக நடிகர்கள் தான் வேட்பாளராக களம் இறங்க வேண்டும். ஐசரி கணேஷ் தன் சொந்த பணத்தில் கட்டிடம் கட்டுவதாக கூறுகிறார்கள் அது முற்றிலும் தவறு. கலைநிகழ்ச்சிகள் அல்லாமல் வேறு ஒரு திட்டம் மூலம் நிதி சேகரிக்க உள்ளோம்.

    தெரியுமா? தெரியாதா?

    தெரியுமா? தெரியாதா?

    15 முறைக்கும் மேலாக செயற்குழுவிற்கு வராத விஷால் மற்றும் கருணாஸ் மீது பாண்டவர் அணி என்ன நடவடிக்கை எடுத்தது?
    மூன்று முறைக்கு மேல் செயற்குழுவிற்கு வராதவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள் என தெரியுமா? தெரியாதா? தவறு செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் குற்றவாளிகளே. செயற்குழு நடந்த வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கார்த்தி கூறுகிறார்.

    சங்கதாஸ் அணி - நேர்மை

    சங்கதாஸ் அணி - நேர்மை

    அவர் வீடியோவை ஊடகத்தின் முன் அதனை வெளியிடட்டும். விஷால், கருணாஸ் ஆகியோர் அனைத்து செயற்குழு கூட்டத்திற்கும் வந்துள்ளனரா? அப்படி அவர்கள் வந்தது நிருபிக்கப்பட்டால் நாங்கள் அனைவரும் பண்டவர் அணியை ஆதரிக்க தயாராக உள்ளோம்.
    அடுத்த தலைமுறைக்கு சங்கம் பதவிகளை விஷால் போன்றோர் தன் சுய லாபத்திற்காக தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக முன் உதாரணமாக சங்கரதாஸ் அணி உருவாகி இத்தேர்தலை நேர்மையாக சந்திக்கிறது. இவ்வாறு நடிகர் ஆரி தெரிவித்தார்.

    English summary
    Actor Aari slams Actor vishal on Actors association election. Vishal is the reason for actor association splits.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X