விரைவில் திருமண அறிவிப்பு... காதல் திருமணம் செய்து கொள்வேன்... இந்த நடிகர் சொல்றத கேளுங்க!

சென்னை :நடிகர் ஆதி தற்போது க்ளாப் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் ஒரு காலை இழந்த தடகள வீரராக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் ஆதி

நடிகர் ஆதி

நடிகர் ஆதி மிருகம், ஈரம், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது க்ளாப் என்ற படத்தில் ஒரு காலை இழந்த தடகள வீரராக நடித்துள்ளார். தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இல்லாத வகையில் இந்தக் கதை தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

க்ளாப் படம்

க்ளாப் படம்

மேலும் கனா படம் தற்போது சீன மொழியில் வெளியானது போலவே க்ளாப் படத்தையும் மற்ற நாடுகளில் ரிலீஸ் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளதை பலமாக பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாரியர் படத்தில் வில்லன்

வாரியர் படத்தில் வில்லன்

தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் படத்தில் வில்லனாக நடித்துவரும் ஆதி, மரகத நாணயம் போன்ற ஜாலியான கதைக்களங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் மரகத நாயணம் 2 படத்திற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் விரைவில் படம் உருவாகும் என்றும் கூறியுள்ளார்.

விரைவில் திருமண அறிவிப்பு

விரைவில் திருமண அறிவிப்பு

மேலும் மரகத நாயணம் போன்றே தற்போது ஹன்சிகா மற்றும் யோகிபாபுவுடன் இணைந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தனது திருமணம் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார். தன்னுடைய திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

 காதல் திருமணம்

காதல் திருமணம்

தான் காதல் திருமணம் செய்யவுள்ளதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் அந்த திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இவருக்கும் பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் என்று கூறப்படும் நிலையில் இருவரும் அதுகுறித்து வெளிப்படுத்தாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X