Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தற்கொலைன்னு சொல்றத நம்பமாட்டேன்.. வேற ஏதோ நடந்திருக்கு.. விஜே சித்ரா உடலை பார்த்து கொந்தளித்த ஆசீம்
சென்னை: விஜே சித்ராவின் உடலை பார்த்த நடிகர் ஆசீம், இதை தற்கொலைன்னு சொன்னா நம்பமாட்டேன், வேற ஏதோ நிச்சயம் நடந்திருக்கு என கொந்தளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த சின்னத்திரை நடிகர்களையும் அதிரவைத்துள்ளது.
சித்ராவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் ஆசீம் கொந்தளித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜய் டிவி பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் கனவு சீரியல் நடிகர் ஆசீம், விஜே சித்ராவின் நல்ல நண்பர். சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டு ரொம்பவே ஷாக்கான அவர், விஜே சித்ராவின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

தற்கொலைக்கு எதிரானவள்
தற்கொலை எண்ணத்திற்கு ரொம்பவே எதிரானவள் சித்ரா என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது முகத்தில் எப்படி கீறல் ஏற்பட்டது. சித்ராவின் மரணத்தில் நிச்சயம் மர்மம் இருக்கிறது என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

சைக்காலஜி படிச்சவ
எம்.எஸ்.சி சைக்காலஜி படிச்சவ சித்ரா, அவ எப்படிங்க சூசைட் பண்ணிப்பா.. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பண்ணி இறந்தப்ப கூட, தற்கொலை தீர்வல்ல என பதிவு போட்டவ, காலையில மதுரையில ஒரு ஷூட் பண்ணா, ஈவ்னிங் சென்னையில ஷூட் பண்ற அளவுக்கு ஒரு பிசியான பொண்ணு.. வேலை இல்லாமல் இருந்தா கூட ஏதாவது ஒத்துக்கலாம் என ரொம்பவே ஆதங்கப்பட்டார் ஆசீம்.

வேற ஏதோ நடந்திருக்கு
சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்துருக்காங்க, ஆனால், இதுல வேற ஏதோ நடத்திருக்கு, அவ நிச்சயம் அப்படி செய்திருக்க மாட்டா, வாய்ப்பில்லாமல் 6, 7 மாசம் வீட்டில் இருந்தால் கூட அப்படி சொல்லலாம். தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு வரை ஷூட்டிங்கில் இருந்தவர் எப்படி அப்படி செய்து கொள்ள முடியும் என்றும் ஆசீம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிக் பாஸுக்கு வரல
சின்னத்திரை நடிகர் ஆசீம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு என்ட்ரியாக வரவுள்ளார் என்றும் அவர் குவாரண்டைனில் உள்ளார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் பரவின. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆசீம் வரப் போவது இல்லை என்பது இன்னமும் அவர் வெளியே இருப்பதை வைத்து உறுதி செய்ய முடிகிறது.