Abbas: சின்ன வயசுல எனக்கு கான்பிடன்ஸ் இந்தளவிற்கு இல்லை.. அப்பாஸை புலம்பவிட்ட கோகுல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்த வாரம் 90 மற்றும் 2கே கிட்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் குட்டீஸ் வழக்கம் போல சிறப்பான பர்பார்மென்சை இந்த வாரமும் கொடுத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 90ஸ் கிட்ஸ் சார்பில் நடிகர் அப்பாஸ் கலந்துக் கொண்டு, குத்தாட்டம் போட்டது பார்வையாளர்களை குஷியாக்கியது.

தனக்கு சிறுவயதில் தன்னம்பிக்கையே இல்லை என புலம்பிய அப்பாஸ்: விஜய் டிவியின் சிறப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாஸ் காட்டி வருகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. சீனியர்களுக்கு தாங்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்று இந்த நிகழ்ச்சியின்மூலம் குட்டீஸ் தொடர்ந்து தங்களை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து தற்போது 9வது சீசனில் கலக்கி வருகிறது. நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகபா தொகுத்து வழங்கி வருகின்றனர். நிகழ்ச்சியில், சித்ரா, உன்னி கிருஷ்ணன், தமன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டவர்கள் நடுவர்களாக கலக்கி வருகின்றனர்.
இந்த வார சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில் குட்டீஸ் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வார நிகழ்ச்சியில் பல கலக்கல் பர்பார்மென்சையும் சில சோகமான நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. ரிச்சா, கோகுல் உள்ளிட்டவர்கள் சிறப்பான பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளனர். நிகழ்சசியில் ஒரு குட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடையில் லிரிக்சை மறந்த நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் அணியை உன்னி கிருஷ்ணனும் 2கே கிட்ஸ் அணியை ஸ்வேதா மோகனும் வழிநடத்திய நிலையில், இவர்களுடைய டீம்களுக்குள் செல்லச் சண்டைகளும் சிறப்பான போட்டியும் காணப்பட்டது. நிகழ்ச்சியில் அஜித்தின் மீனாட்சி மீனாட்சி பாடலை, கோகுல் பாடிய நிலையில், அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் இந்த பாடலை என்ஜாய் செய்தனர். இந்தப் பாடலையடுத்து பேசிய நடுவர் சித்ரா, அதிகமான எனர்ஜியுடன் கோகுல் எப்போதுமே காணப்படுவதை சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் கோகுலுக்கு கோல்டன் பஸ்ஸரை நடிகர் அப்பாஸ் ஓடி வந்து கொடுத்தார். மேலும் கோகுலுடன் இணைந்து அவர் மேடையில் குத்தாட்டமும் போட்டார். இதையடுத்து சாக்லேட் பாயை கானா பாயாக கோகுல் மாற்றிவிட்டதாக ஆங்கர் பிரியங்கா பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அப்பாஸ், 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஸ்டூடியோவிற்கு வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சின்ன வயதில் போட்டியாளர்கள் அனைவரும் இவ்வளவு நம்பிக்கையுடன் உள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்.
தான் இவர்களின் வயதில் அந்த அளவிற்கு கான்பிடன்சுடன் இல்லை என்றும் இவர்கள் அனைவரும் இந்த அளவிற்கு நம்பிக்கையுடன் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்றும் கூறினார். காதல் தேசம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அப்பாஸ். இதைத் தொடர்ந்து படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அப்பாஸ், ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் சென்னை வந்துள்ள அப்பாஸ் சமீபத்தில் தான் மீண்டும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











