Abbas: அப்பவே அப்படியொரு விபரீத முடிவு எடுத்தேன்.. நடிகர் அப்பாஸ் வாழ்க்கையில் இப்படியொரு சோக பக்கமா

சென்னை: நடிகர் அப்பாஸ் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான காதல் தேசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.

கதிர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அப்பாசிற்கு மிகப்பெரிய ப்ரேக்கை கொடுத்தது. தொடர்ந்து பல சிறப்பான படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார் அப்பாஸ்.

Actor Abbas shared about tragedy in his life and the way he comes out

வாழ்க்கையின் சோக பக்கத்தை வெளிப்படுத்திய அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான காதல் தேசம் படத்தின்மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர். கதிர் இயக்கத்தில் வெளியான இந்த முதல் படமே அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அப்பாஸ். குறிப்பாக ஏராளமான ரசிகைகளின் உள்ளம் கவர்ந்த ஹீரோவாக மாறினார்.

கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படத்திலும் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்துள்ளார் அப்பாஸ். பம்மல் கே சம்பந்தம் அப்பாசின் 25வது படம். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத்துவங்க, படங்களில் நடிப்பதில் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிப்பதை அப்பாஸ் நிறுத்திவிட்டார். இதையடுத்து தன்னுடைய குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது சென்னை திரும்பியுள்ள அப்பாஸ், தன்னுடைய படங்கள் எந்த அளவிற்கு வெற்றியை கொடுத்ததோ, ஒரு கட்டத்தில் அதிகமான தோல்விகளையும் கொடுத்ததாகவும் இதனால் பணக்கஷ்டம் ஏற்பட்டதாகவும் வீட்டு வாடகை செலுத்தக்கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். வேறு வேலை செய்யவும் மனமில்லாமல் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியிடம் வாய்ப்பு கேட்டதாகவும் அவர் பூவேலியில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும் அப்பாஸ் கூறியுள்ளார்.

Actor Abbas shared about tragedy in his life and the way he comes out

இதையடுத்து நடிப்பதில் ஆர்வம் குறைந்ததால் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதாகவும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக டாக்சி ஓட்டியதாகவும் பைக் மெக்கானிக் வேலை பார்த்ததாகவும் அப்பாஸ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கோவிட் நேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்தவர்களுக்கு தான் உதவ நினைத்ததாகவும் அப்பாஸ் கூறியுள்ளார். அவர்களை தான் புரிந்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கும் தன்னுடைய பள்ளிகாலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாகவும் தான் 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், தன்னுடைய காதலும் பிரேக் அப் ஆனதாகவும் அதனால் சாலையோரம் நின்று வேகமாக வரும் வாகனம் முன்பு விழுந்து தற்கொலை செய்ய நினைத்ததாகவும் ஆனால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் அப்பாஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு தான் செய்தால் அந்த நபரின் வாழ்க்கை பாதிக்கும் என்று நினைத்து தான் அந்த செயலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X