நடிகர் அப்பாசுக்கு திடீர் அறுவை சிகிச்சை..என்ன ஆச்சு..பதறிய ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அப்பாஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
90களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.
தமிழில் 1996ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.

அடுத்தடுத்த படங்கள்
காதல் தேசம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து, நடிகர் அப்பாசுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. விஐபி, மின்னலே, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், திருட்டுப்பயலே உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தன.

மனம் கவர்ந்த நடிகர்
காதல் தேசம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பிரேம தேசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றதால் தெலுங்கு ஆடியன்ஸ் மனதிலும் இடம்பிடித்தார் அப்பாஸ். தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என அனைத்துப்படங்களிலும் ரவுண்டு கட்டி வந்த அப்பாஸ், இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

படவாய்ப்பு இல்லை
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸுக்கு திருட்டு பயலே படத்திற்கு பிறகு, வெளியான எந்த படமும் வெற்றி பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததால், கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நடிகர் அப்பாஸ் தமிழில் இறுதியாக ராமானுஜன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தனது முகநூல் பக்கத்தில் ரசிகர்களை நேரலையில் சந்தித்து பேசி வருகிறார்.

மருத்துவமனையில் அப்பாஸ்
இந்நிலையில், நடிகர் அப்பாஸ் தனது பேஸ் புக் பக்கத்தில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் இருக்கும்போது கவலைகள் மிக மோசமானவையாக இருக்கும். ஆனால் நான், சில பயங்களை சமாளிக்க முயற்சிக்கிறேன். நான் என் மனதை மேம்படுத்த முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

பதறிய ரசிகர்கள்
இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு அப்பாசுக்கு எனகேள்வி கேட்டு வருகின்றனர். அப்பாஸ், என்ன அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இருப்பினும் அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











