காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ள அதர்வா பட டைட்டில் அறிவிப்பு.. அட சூப்பர் டைட்டில்ங்க!

சென்னை: நடிகர் அதர்வா பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக வெள்ளந்தி நடிப்பை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜோடியாக சமந்தா. க்யூட் ஜோடியாக இவர்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தனர். இந்தப் படத்தில் துவங்கிய அதர்வாவின் பயணம் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக அமைந்தது.

இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக மாறிய அதர்வா, தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதிலும் காதலை மையமாக கொண்ட படங்களில் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது டான் பிக்சர்ஸ் தயாரித்துவரும் 4வது படத்தில் அதர்வா முரளி நடித்து வருகிறார். இதன் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Adharva Idhayam murali movie Dawn pictures

நடிகர் அதர்வா: நடிகர் அதர்வா மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் நுழைந்தார். ஆனாலும் தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக மாறினார். பானா காத்தாடி என்ற படத்தில் நடிகை சமந்தாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த முதல் படம் அதர்வாவிற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. தன்னுடைய அப்பாவை எந்த வகையிலும் நியாபகப்படுத்தாத வகையில் இவரது நடிப்பு காணப்பட்டது இவரது சிறப்பாக பார்க்கப்பட்டது. பானா காத்தாடி படத்திற்கு பிறகு அதிகமான படங்களில் இவர் கவனத்தை பெற்றாலும் இமைக்கா நொடிகள் படத்தில் இவரது நடிப்பு அதிகமான பாராட்டுகளை பெற்றது. பரதேசி படத்திலும் ஸ்கோர் செய்திருந்தார்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு: தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்தாலும் இவரால் முன்னணி நடிகராக மாற முடியவில்லை. தற்போது டிஎன்ஏ, ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துவரும் எஸ்கே 25 படத்திலும் இவர் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்திலும் இவர் இணைந்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குநராக மாறியுள்ளார். டான் பிக்சர்சின் இட்லி கடை, பராசக்தி, எஸ்டிஆர்49 படங்களை தொடர்ந்து இந்தப் படத்தை 4வது படமாக தயாரித்து வருகிறது.

இதயம் முரளி டைட்டில்: இந்தப் படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், நட்ராஜ், கயாடு லோஹர்,பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிகாரிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில் படத்திற்கு இசையமைத்துள்ள தமன், படத்தில் ஒரு கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய அப்பாவின் அடைமொழியிலேயே அதர்வாவின் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இதயம் முரளி the one side என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையொட்டிய வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் அதர்வா, தமன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

காதல்.. பிரேக்கப்: படம் காதலை கதைக்களமாக கொண்டுள்ளது. டைட்டில் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்டுள்ள வீடியோ மிகவும் க்யூட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோ 5 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது. காதல் மற்றும் பிரேக்கப் என இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது திருமணம் குறித்தும் பேசப்படுகிறது. காதலர் தினம் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மறைந்த நடிகர் முரளியின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்த இதயம் படம் அவரது அடையாளமாக மாறியுள்ள நிலையில் இதயம் முரளி என்ற பெயருடன் இந்தப்படத்தில் அவரது மகன் களமிறங்கியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Read more about: adharva அதர்வா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X