தாத்தாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய சூப்பர் ஸ்டாரோடு ஹாட்ரிக் அடிக்கும் பேரன்!
சென்னை: நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் மூன்றாவது முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
60, 70' களிலும் 80' களிலும் வில்லனாக, குண சித்திர நடிகராக, காமெடியிலும் கலக்கியவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தில்லு முல்லு ஹிலாரியஸ் ஹிட் காமெடி படம். தலைவர் அண்ணன், தம்பி இரட்டையர்களாக ஒரு மீசையை வைத்து முதலாளி தேங்காய் சீனிவாசனை ஏமாற்றும் காட்சிகள் இன்றும் நம்மை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும். இன்று அவர் நம்மிடையே இல்லை. தற்போது தாத்தாவை போல் பேரன் ஆதித்யா ஷிவ்பிங்க் சூப்பர் ஸ்டாரோடு இணைந்து கலக்கி வருகிறார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் பாடல் காட்சிகள் ஜெய்ப்பூரிலும், மும்பையிலும் நடந்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஜீவா, ஜடின் சர்னா, பிரதீக் பாபர், நவாப் ஷா, குழந்தை மனஸ்வி கோட்டாச்சி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். ஆதித்யா இப்படத்தில் 2.0 மற்றும் பேட்ட ஆகிய வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு 3 வது முறையாக இணைந்து ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.
தாத்தா பல படங்களில் சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்துள்ளார். நானும் என்னால் முடிந்த வரை அவர் பெயரை காப்பாற்ற முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே தேங்காய் சீனிவாசனன் பேத்தி ஸருத்திகாவும் நடிகை. ஆல்பம், தித்திக்குதே மற்றும் ஶ்ரீ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
25 வருடங்களுக்குப் பிறகு போலீஸ் சீருடையை அணிவதால் இந்த படம் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. போலீஸ் சார்ந்த அதிரடி படமாகவும ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கடைசியாக டைகர் ஜிந்தா ஹை படத்தில் நவாப் ஷா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே சுனில் ஷெட்டி வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் பிரதீக் பாபர், இப்படத்தில் சுனில் ஷெட்டியின் மகனாக நடிக்கிறார். மும்பை செட் படம் 2020 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications