வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பிரபல நடிகையின் கணவர் அதிரடி கைது.. பரபரப்பு!
சென்னை: வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பிரபல நடிகையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வதும் பின்னர் மறுமணம் செய்து வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதேபோல் திருமணம் முடித்து மனைவி மக்கள் என ஆன பின்பும் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் சம்பவமும் சினிமாத்துறையில் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

மலைளயாள நடிகை
அந்த வகையில் மலையாள சினிமா உலகில் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த நடிகரை அவரது மனைவியே போலீஸில் சிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை அம்பிலி தேவி. இவர் மம்முட்டியுடன் விஸ்வதுளசி படத்தில் நடித்து பிரபலமானார்.

நடிகருடன் காதல்
மேலும் பல மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் அம்பிலி தேவி. சீதா எனும் சீரியலில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகர் ஆதித்யன் ஜெயனுடன் அம்பிலி தேவிக்கு இரு வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது.

நடிகருக்கு 4வது மனைவி
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4-வது மனைவி ஆவார்.

நடிகைக்கு 2வது கணவர்
இதுபோல் அம்பிலி தேவியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அவருக்கு ஆதித்யன் இரண்டாவது கணவர் ஆவார். இதனால் இவர்கள் திருமணத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.

வெடித்த குடும்பத் தகராறு
அம்பிலியின் இரண்டாவது திருமணம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்பிலிக்கும் ஆதித்யனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

அம்பிலி தேவி புகார்
இதனால் ஆதித்யன் கையில் நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இந்நிலையில் ஆதித்யன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அம்பிலி தேவி, போலீசில் புகார் செய்தார்.

திரையுலகில் பரபரப்பு
மனைவியின் புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கள்ளத் தொடர்பு வைத்திருந்த நடிகர் மனைவியின் புகாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











