கழிவறையில் விழுந்து நடிகர் மர்ம மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட்.. நடந்தது என்ன?

சென்னை : பிரபல சீரியல் நடிகர் கழிவறையில் விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மட்டுமின்றி, பிரபல மாடலாகவும், காஸ்டிங் ஒருங்கிணைப் பாளராகவும் பலரது கவனத்தை ஈர்த்து வந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத்.

வளர்ந்து வரும் நடிகரான இவர் சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலம்.

Actor Aditya Singh Rajput was found dead in his bathroom

ஆதித்யா சிங் ராஜ் : தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Splits Villa சீசன் 9 கலந்து கொண்டு பிரபலமானவர் ஆதித்யா சிங் ராஜ்புத். மாடலான இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மும்பை உள்ள அந்தேரி வீட்டில் தலையில் காயத்துடன் சுயநினைவை இழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

குளியலறையில் சடலமாக : நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் வீட்டின் குளியலறையில் மயங்கி கிடப்பதை பார்த்த பணிப்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் ஆதித்யாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தவறிவிழுந்து : நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் நிலை தடுமாறி கழிவறையில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கழிவறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்திருக்கலாம் என்றும், அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிரேதபரிசோதனைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

Actor Aditya Singh Rajput was found dead in his bathroom

கதறி அழுத நண்பன் : ஆதித்யா சிங்கின் நெருங்கிய நண்பர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் அனைவரும் வெளியில் சென்றுவிட்டு இரவு ஆதித்யாவை வீட்டில் விட்டுத்தான் சென்றோம். ஆனால், காலையில் இப்படி ஒரு வேதனையை அவன் எங்களுக்கு கொடுப்பான் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ஆதித்யா சிங்கின் நண்பன் கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X